பக்கம்:அன்பு மாலை.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


罗 அன்பு மாலே

னேன். அவற்றைப் பார்க்கிறவர்கள், அதன் கோணலைக் கானுவார்கள். ,

ஆனல் கோணலிலேதானே அழகு இருக்கிறது? நேர் கோட்டில் அழகு இல்லை. வளைந்த கோட்டில்தான் சித்திரங்கள் அமைகின்றன. நேரான நடையில் அழகு இல்லை. கோணலான நடனத்திலேதான் அழகு இருக் கிறது. ஆகவே, நான் கோணலான ஒரு முகவுரையை எழுதியிருக்கிறேன். அந்தக் கோணலிலே மாணல் இருக்கிறதா என்பது படிக்கிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். ஒரு முன்னுரை, அதற்குப் பின்னலே சென்ற ஆண்டு நான் நிகழ்த்திய சொற்பொழிவு, அதன் பின்னலே அவ்வப்பொழுது நான் பாடிய பாடல்கள். எல்லாம் சேர்ந்து ஒரு புத்தகத்தை அவசரமாக நேற்றுச் சித்தம் பண்ணி இன்றைக்கு இங்கே கொண்டு வரும்படியாக அருள்பாலித் திருக்கிரு.ர்கள், சுவாமிகள். அவர்களுடைய திருவடியிலே மலர் சாத்த அறி யேன். அவர்களுடைய திருத்தோளிலே மாலை சாத்த அறியேன். அவர்களுடைய தலையிலே முண்டாக கட்ட அறியேன். அவர்களுடைய இடையிலே ஆடை சாத்த அறியேன். ஆலுைம் நான் பாவாடை அணித் திருக்கிறேன்: ஆணுகிய சுவாமிகளுக்குப் பாவாடை” அணிந்திருக்கிறேன்! பூமாலே போடாவிட்டாலும் பா மாலே போட்டிருக்கிறேன். இவைகளெல்லாம் அன்பர் களுக்கு உகப்பாக இருக்கும். என்னுடைய பாட்டி னுடைய பலத்தினலே அல்ல. இந்தப் பாட்டு யாரைச் சொல்கிறதோ அவர்களுடைய நினைவிஞலே, படிக்கிறவர் கள் எல்லாம் இன்பம் எய்துவார்கள். -

ஊதுவத்தி கறுப்பாய் இருக்கிறது. ஆனல் அதைக் கொளுத்தும்பொழுது மணம் வீசுகிறது. கறுப்பாக இருக்கிறதே. இது எதற்காக என்று யாரும் வெறுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/8&oldid=535529" இருந்து மீள்விக்கப்பட்டது