பக்கம்:அன்பு மாலை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அன்பு மாலை

தீயால் பஞ்சு முழுதெரியும்;
சினத்தால் நல்ல குணம்போகும்;
ஆயால் பசிதான் நீங்கிவிடும்;
அருளால் வினைகள் எவையும்போம்;
மாயை தன்னால் அறிவழியும்;
வந்தார் மாட்டே நலமெல்லாம்
மேய அருள்செய் ராமசுரத்
குமார்பால் வந்தால் வினையறுமே.

ஆயால் - தாயினால்.

கல்லும் உருகக் கண்ணொளியால்
கனிந்தே அருளைக் காட்டுகின்றான்;
சொல்லில் அன்பு கலந்துசுவை
துன்னச் செய்யும் சீலனிவன்:
அல்லல் நீக்கும் ஒருநாதன்,
அவலம் நீக்கும் பெருநாதன்;
மல்லல் உடைய ராமசுரத்
குமாராம் மாண்பார் யோகியரோ.

துன்ன - சேர. மல்லல் - பெருமை.

அஞ்சக் கரத்தான் இவனென்பார்
ஆறக் கரத்தான் இவனென்பார்;
கஞ்சக் கரத்தான் இவனென்பார்,
கதிரோன் இவனே என்பார்கள்;
நஞ்சக் கழுத்தான் இவனென்பார்;
நாதன் இவனே என்பார்கள்;
எஞ்சற் கில்லை ராமசுரத்
குமாரின் புகழுக் கெல்லையுண்டோ?

அம்சக்கரத்தான் - அழகிய சக்கரத்தை உடைய திருமால். கரத்தான் - முருகன். கஞ்சக் கரத்தான் - தாமரைக் கோயிலில் பிரமன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/80&oldid=1303485" இலிருந்து மீள்விக்கப்பட்டது