பக்கம்:அன்பு மாலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

அன்பு மாலை

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருவாளன் ராமசுரத் குமார்சீரைப் பேசுதற்குத்
தினம்தினமும் முயன்றாலும் அதற்கெல்லை தானுண்டோ? பெருமால்கொள் உலகத்தில் மாயையிலே மிகச்சிக்கிப்
பேதைமையில் நின்றிருக்கும் மனிதர்காள், யாவருமே
உருமாலை தலைக்கணியும் ராமசுரத் குமார்பாலே
உற்றிடுவீர், ஞானமெனும் உருவதனைக் காண்பீர்கள்;
திருநாமம் ஒருகாலே சொல்லிடினும் நலமாகும்;
திகழஇங்கே அணுகுவீர்; உபசாந்தி பெறலாமே.

204

மால் - மயக்கம். உருமாலை - ருமால் என்னும் துணியை,

(வேறு)

திருவருணை நகர்வாழி! தேசு பூண்ட
சிவபெருமான் அருள்வாழி! அன்பர் வாழி!
மருவுகின்ற ஞானஉரு வாகி நின்ற
வள்ளலாம் ராமசுரத் குமார யோகி
பெருநாமம் மிகவாழி! தொண்டர் வாழி!
பேசுகின்ற மொழிவாழி! அன்பர் வாழி!
வருவார்கள் மிகவாழி மறையும் வாழி!
வையகத்தார் எலாம்வாழி! வாழி வாழி!

205


(22-11-79 கடிதப்பாட்டு)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

ஒம்எ னும்பெரு மந்திரத் துட்பொருள்,
உயர்மறை உறைபொருளாம்
நாம மின்றியே பற்பல நாமங்கள்
நண்ணிய பரம்பொருள்எம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/81&oldid=1460022" இலிருந்து மீள்விக்கப்பட்டது