பக்கம்:அன்பு மாலை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

அன்பு மாலை

சீலத்தை ஞானத்தை அடையவழி கோலும்,
செம்மைநெறி இதுவென்றே காட்டியருள் கின்றான்:
ஆலத்தை அமுதாக்கும் அரன்வாழும் அருணை
யாம்பதியில் எழுந்தருளும் ராமசுரத் குமரன்.

209

வானத்தை ஆடையென மடிப்பதற்கு வழியை (நோயாம்
வகுப்போம்என் றுரைத்திடுவார்; வந்தவர்தம்
ஈனத்தைப் போக்கிடுவோம் என்றிறுமாந் துரைப்பார்;
எல்லாரும் தம்மடியில் விழவேண்டும் என்பார்;
ஞானத்தைச் சிறிதறியாப் போலிகளை நண்ணி
நம்பிக்கை மிகவைத்தே ஏமாந்தார் பல்லோர்;
கானத்தை மிகவிரும்பி இராமனெனும் நாமம்
கவினுறவே சொல்ராம சுரத்குமார் நல்லோன்,

210

ஆத்திரத்தை அடக்குதற்கு வழியறியார்; நாமே
அருள்வழங்கி நோய்தீர்ப்பம் வம்மின்கள் என்பார்:
சாத்திரத்தை மிகவிரித்து விளக்கியுரை செய்வார்;
சத்தியமே உரைக்கின்றோம் எனத் தாமே மொழிவார்;
காத்திரத்தைப் பிரித்துயிரைக் கொள்ளவரும் காலன்
கைப்படியும் காலத்தே மாண்டுவிடு வார்கள்;
தோத்திரத்தை விரும்புகின்ற அவர்போலே யன்றித்
தூயபெரு ஞானியாய் ராமகுமார் இருப்பான்.

211


அளப்பரிய வார்த்தைகளை அலுப்படையப் பேசி
அடைவாரைப் பேச்சினிலே மயக்குவார் பல்லோர்;
உளத்தினிலே அவாவினையே உள்ளடக்கி வைத்தே
ஒருபொருளும் யாம்வேண்டேம் எனச்சொல்லிநிற்பார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/83&oldid=1303366" இலிருந்து மீள்விக்கப்பட்டது