பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அன்பு வெள்ளம்


சாவினையும் அதனுடன் இணைந்துவரும் அச்சத்தையும் அகற்றியது அன்பு!

ஆணிகளால் ஆகிய முள்முடி தரிக்கப்பட்ட - முக்கால் அம் மணம் ஆக்கப்பட்ட கலீலி தந்த மேன்மையினைத் தனித்தோங்கும் உள்ளங்களை ஆண்டு கொள்ளும் அரசனாக்கியது அன்பு தான்்!

புயலால் அலைக்கழிக்கப்பட்டுச் சுக்கு நூறாகிவிட்ட நெஞ்சங் கொண்ட அவரை, 'ஆடை ஆற்ற அரசர்' என்பதைவிடப், 'பற்றறுத்தல் உற்றாருக்கு உடம்பே மிகை' என்னும் மெய்ப் பொருள் கண்ட மாமன்னரைத் துறவி என்றே அழைக்கிறது என் உள்ளம்.

அந்த மாமன்னனுக்கு முடிசூட்ட வேண்டுமென்கிறது அன்பு. முள் முடியா? அன்று, அன்று.

நம் நெஞ்சத்தால் - மனமார நாம் செய்யும் பத்தி, பண் பாட்டினால் செய்யும் வழிபாடு என்னும் மலர் மகுடத்தைச் சூட்ட வேண்டும் என்று பணித்துவிட்டது அன்பு.

காணரிய இன்பத்தினை நல்கும் இளமை குன்றாத தூய ஆவியை, இருள் சூழ்ந்த சமயப் பற்றற்ற நாகரிகமற்ற ஆப்பிரிக்க மக்களிடையே அனுப்பி வைக்கிறது அன்பு. ஏன்?

அன்பின் தொடு உணர்ச்சிகூட அற்ற நிலையினை மாற்றிட உணர்ச்சியற்று எதையும் புறக்கணிக்கும் போக்கினை விடுத்திட, தன்னலம் - பேராசை என்னும் அழுக்காற்றினை அகற்றிடத்தான் தூய ஆவியான அன்பு அவர்களிடம் சென்று வாழ்ந்திடத் தழைத்தோங்கிடத்தான் மேலும் மேலும் அம் மக்களின் அன்பு சென்று நிலைத்து நிற்கிறது; அவர்கள் இன்னல் நிறைந்த இருளினை விரட்டுகிறது; புத்தொளி பாய்ச்சுகிறது; புதிய படைப்பாக அவர்கள் அகம்புறம் மலர்ந்திடச் செய்கிறது. அப்படிப்பட்டது தான் அன்பு; வல்லமையாவினும் வல்லமையாக அழகு வாய்ந்த யாவற்றினும் பேரழகாக விளங்குகிறது அன்பு.

அவ் அன்புதான் கடவுளின் இயல்பாகும். அன்பின் அவ் இயல்பினால்தான் மாந்தரின் நெஞ்சத்தைக் கவர்ந்து அதிலே நிறைந்து நிலைத்திட ஒங்குகிறது.

★ ★ ★