பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அன்பு வெள்ளம்


"கடவுள் என்னில் அன்பு கூருகிறார்; என் மேல் கடவுள் அன்பு காட்டுகிறார்; கடவுள் என்மேல் அன்பு கொண்டுள்ளார்" என்று சொல்லுங்கள். சொன்ன பிறகு உங்களில் உங்கள் உள்ளுயிர்ப்பில் ஏற்படும் எதிர் வினை என்ன என்று பாருங்கள் உங்கள் உதடுகள் உங்களை அறியாமல், "கடவுள் தாமே என்னை அன்புடன் விரும்புகிறார்” அல்லது "என் தந்தை என்னை அன்புடன் விரும்புகிறார்” வாயிதழ்கள் இவ்வாறு முனு முணுக்கத் தொடங்கிவிடும்.

"கடவுள் என்று சொல்லிவிடுவதாலேயே, நீங்கள் கடவுளின் அருகில் இருப்பதாகக் கொள்ளமுடியாது. அல்லது 'தந்தை என்று சொன்னாலும் போதாது. அந்தத் தூய சொல்லை, உங்கள் மனச் சான்றுக்குள், வல்லந்தமாகச் சொல்லி, உள்ளே பதித்தல் வேண்டும். -

நாம் அடைய வேண்டிய மிக உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டோம். செய்ய வேண்டிய மிகப் பெரிய செயல்களைச் செய்துவிட்டோம். எப்படி? நாம் இருக்க வேண்டிய மிக உயரிய அன்புச் சூழலில் இருக்கிறோம் அதனால்!

அன்பு வாழும் இல்லத்தில் குழந்தைகள் வளர வேண்டிய வகையில் வளர்ந்து வருகின்றன. அன்பு மனையாள் தன் வருகைக்காகக் காத்திருப்பாள் என்பதறிந்து, அவரவர் கணவன்மார்கள் ஆற்றிட வேண்டிய அரும்பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். தம் கணவர் வருகை தருவார்; அன்பு காட்டுவார்; ஆவன செய்வார் அகம் குழைய இரவில் கொஞ்சுவார் என்று இன்முகத்துடன், இல்லக் கிழத்தியர், இல்வாழ்க்கைத் துணைவியர் தத்தம் இல்லப் பணிகளை முடிந்து விட்டிருக்கின்றனர்.

எண்ணமாயினும், செயல் நோக்கம் ஆயினும், செயலாயினும் அன்பிற்கு அப்பாற்பட்டதாயின், அது, நாம் அடைய வேண்டிய நற்பேற்றினை அடையவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தி வீண்படச் செய்துவிடுகிறது. அன்புச் செயல் ஒவ் வொன்றும் நம்மைப் பலப்படுத்துகிறது; வளம் பெறச் செய்கிறது, செய்யும் அன்புச் சிந்தனை ஒவ்வொன்றும் நம்மை உயர் வாக்குகிறது. முதலில் அன்பு பற்றி சிந்திக்க வேண்டும் அன்புச் சிந்தனை வேண்டும்; அதன் பயனாக அன்புப்பணி ஆற்றிட வேண்டும் மனிதருக்கு அன்பு எனும் ஒன்று எத்தனை நலம்பயக்குகிறது. மண்ணுல வாழ்வில் நற்பதம் முதல் விண்ணுலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/100&oldid=1219549" இலிருந்து மீள்விக்கப்பட்டது