பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

97


வாழ்வாம் வீடுபேறு வரையில் அத்தனைக்கும் திட்டமிட்டு உதவுவது அன்பு.

நம் உடல் நலத்தைப் பேணிக்காக்கிறது அன்பு. அன்பே கடவுள்; கடவுள் என் பிணிகளைத் தீர்ப்பவர், என் நோய்களைக் குணமாக்குபவர். பகைமை எண்ணம், கசப்புணர்ச்சி, பயிற்றுக் கோளாறு உண்டாகச் செய்கிறது; அரத்த ஒட்டத்தைத் தடை செய்கிறது அது என்பது இப்பொழுது புரிகிறது.

சினத்துடன், கடுகடுத்த முகத்துடன் ஒரு தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுப்பதனால் தான்் அந்தக் குழந்தை, குணம் கெட்ட குழந்தையாக வளருகிறது. குழந்தைக்கு அன்புடன் பால் ஊட்ட வேண்டும் என்பதுதான்் கடவுள் எல்லாம் வல்லதாக எண்ணி அன்னைக்குள், பாலை வைத்தருளினான். தாய், தன் குழந்தைக்கு ஊட்டும் பால் இனிதான்தாக, ஊட்டம் மிக்கதாக, வளர்ச்சியும் உயிரின் மலர்ச்சியும் தருவதாக அமைய வேண்டு மானால், அந்தத் தாய், தன் கணவனை, மற்றும் தன்னைச் சூழ்ந்து உள்ளவர் அனைவரையும் அன்புடன் விரும்ப வேண்டும்.

அன்பில் வட்டத்தைவிட்டு அடியெடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், நோயினையும் தோல்வியையும் வலையையும் தளர்ச்சியையும் அறை கூவல் இட்டு அழைக்கின்ற முயற்சியாகும். செயலாகும்.

நம்மால் செய்யப்படுகின்ற ஒரே ஒரு தீமை ஒன்று உண்டு என்றால், அது, அன்புக் கோட்டினை விட்டு வெளியே அடியெடுத்து வைப்பதுதான், நாம் செய்யும் மற்ற தீங்குகள் எல்லாம் தீங்குகளை எல்லாம் படைக்கும் தீங்குகள்தாம்!

அன்புப் பாதையில், அன்பு நெறியில் நாம் நடப்போம் என்றால், நாம் ஒரு போதும் ஒரு தீமையும் செய்யோம்; செய்யமாட்டோம். வியப்பிலும் வியப்பு அல்லவா இது? அன்பினால் தீர்க்கப்படாத சிக்கல்களே இல. மாந்தரின் சிக்கல் எதுவானாலும் தீர்த்துவைக்கும் வல்லமை ஆற்றல், அன்புக்கு மட்டுமே உண்டு.

அன்பெனும் உலகில் வாழ்வது, அன்பு எனும் மொழியைத் கற்றுக் கொள்வது, அன்பின் ஒழுங்கு முறைமையைக் கைக் கொள்வது அன்பின் வழியினைக் கண்டறிவது போன்றவற்றைப் பயில்வதுதான்் கல்வி. அது வெறும் பாடப் பயிற்சிக் கல்வி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/101&oldid=1219550" இலிருந்து மீள்விக்கப்பட்டது