பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

அன்பு வெள்ளம்


தொழிற் கல்வி நுட்பக் கல்வியல்ல; மனத்தைப் பொதுவாக விரிவுபடுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கல்வி (Liberal Education) யாகும் அந்தக் கல்வியினைக் கற்பதே கல்வியாகும்.

கடவுளே அன்பாயிருக்கிறார்; அந்த அன்புக் கடவுளே, நம் தந்தை. நாம் அவருடைய பிள்ளைகள். அன்பு எனும் குடும்பத்தில் நாமும் ஒருவர்.

இயேசுவே அன்பு: நாம் நடக்கும் அன்பு வழி, இயேசுவின் வழி. அனைத்துமே இயேசு நமக்குக் காட்டிச் சென்றுள்ள அன்பு நெறி. எல்லாம் இயேசுவின் அன்புச் செயல்கள் செயல்களில் எல்லாம் ஊடுருவி நிற்பது இயேசுவின் அன்பேயாகும்.

உலகத்தை ஒன்றாகக் கட்டிடல் அன்பாம்
நலஞ்செயும் பொற்சங் கிலி.

அன்பு மொழி ஆள்க

ன்பினைத் தனித் திறனாகக் கொண்டு எண்ணிடக் கற்றுக் கொள். உங்களுடைய செயல்களுக்கெல்லாம் தாயாகவுள்ள அன்பின் பின்னணியில் தான்் நம் வாழ்க்கை அமைந்தது; அப்படி அமைந்த உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் நல்லது என்று எதைக் யாருக்குக் கொடுத்தாலும் அதனை அன்பாகக் கொடுங்கள்; இயேசுவின் அன்பினைப் போன்ற அன்பின் வழியே கொடுத் திடுங்கள். அன்பின் மொழி எது என்று அறிந்து கொள்ளுங்கள்; அந்த அன்பின் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் உலக மக்களின் மொழியின் இடத்தில் அன்பின் மொழியைத் திகழவையுங்கள்.

இதுவரை நம்மை, புலன் அறிவு ஆண்டு வந்தது போதும்; இனி அதனிடத்தில் அன்பார்ந்த அன்பினை ஆளவிடுங்கள். சிறிதளவு அன்பின் வழியினைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்; அந்த அன்பின் வழி, பண்புமிக்க நடையுடைய, மேன் மக்களுக்குரிய வழி; கடுமையற்ற மென் நயமான வழி: அழகிய வழி. அதனைக் கண்டு அதில் நடப்போம். அதுமட்டுமன்று, அதோடு அன்பினைக் காண்பது எப்படி? அன்பின் கண் கொண்டு பார்ப்பது எப்படி அன்பின் கண் கொண்டு காண்கின்ற போது அந்தக் கண்கள் அன்பினால் ஒளிமயமாகும். ஒளிம்யமான அன்பு நிறை நம் கண்களில் இயேசு கிறித்து நிழலாடுவதனை மக்கள் காண்பர்! நம்மில் இயேசுவைக் காண்பர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/102&oldid=1516665" இலிருந்து மீள்விக்கப்பட்டது