பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அன்பு வெள்ளம்


ஒழுகலாற்றுக்கு அடையாளச் சின்னம் என்று சொல்வதால், நாம் நமது மேற்சட்டையில், அணிந்து கொள்ளும் தங்கம் பதக்கம் என்று பொருள் கொள்ளக் கூடாது. நம் வாழ்க்கை என்று கொள்ள வேண்டும். அதுவும் எப்படிப்பட்ட வாழ்க்கை என்று எண்ணுகிறீர்கள்? இயேசு நடந்து காட்டியது போன்ற வாழ்க்கை.

பிலிப்பியர் 2-14-15, "உலகத்திலே சுடர்களைப் போல் ஒளிர்கிற நீங்கள் கோணலும் மாறுபாடுமான மரபின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடமற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முணுமுணுப் பில்லாமலும் தருக்கிப்பில்லாமலும் செய்யுங்கள்"

இந்த நிறைமொழியின்படி, நாம், குற்றமற்றவர்கள், கபட மற்றவர்கள்; கடவுளின் பிள்ளைகள் நாம் நமது அன்றாட வாழ்வில் செய்யும் செயல்கள் எல்லாம் அன்பின் அடிப்படையில் செய்து வருவதால், மற்ற மாந்தரிலும் வேறுபட்டவர்கள் ஆவோம் அதனால் நாம் எல்லாரும் அன்புடையர்.

கடவுள் ஒளியாயிருக்கிறார். அன்பும் ஒளியாயிருக்கிறது. நாம் நிறை அன்பில் நடந்தால், நாம் ஒளியில் நடக்கிறோம் என்பதும் உண்மை. நாம் நம்முடைய கடவுளுடன் தோழமை கொண்டுள்ளோம்.

நாம் ஒருவரில் ஒருவர் ஆன்மிகக் கூட்டுறவில் இனிது வாழ்கிறோம். ஒருவரில் ஒருவர் அன்பு கலந்து இன்புற வாழ்ந்து வருகிறோம்.

அன்பின் ஆட்சி நிலவும் அருள் உலகம்

டவுளுடன் நாம் கொண்டிருக்கும் இனம் அறியப்படாத ஒரு புதிய உறவு, நம்மை இயேசுவின் பண்பும் சிந்தனையும் உடையவராக ஆக்குகிறது. இயேசு தம்மை வெளிப்படுத்துவதன் பொருட்டு, நம்மில் அன்பு கூர்ந்து, நம்மில் வாழ்ந்து வருவதன் மூலம், தெய்விகப் பண்பினையும் அன்பினால் நிகழும் அரும் பெரும் செயல்களின் ஆற்றலையும் நாம் பெற்றுத் திகழ்கிறோம்.

அப்படிப் பெற்றுத் திகழும் நம் வாழ்க்கை, விண்ணகத்தின் ஒளியாயிருக்கிறது. அவ் ஒளி, நம்மில் இயேசு வந்து இலங்கிடவிடுகிறது. நாம் அன்றாட வாழ்வில் இயேசுவின் வாழ்க்கை