பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

103


வெளிப்பட விளங்கச் செய்கிறது. நம்மில் இயேசு வந்து நின்று நிலவி ஒங்கிடச் செய்கிறது.

அது ஒரு வாய்மையம் (philosophy) அன்று; திருமறைக் கோட்பாடும் அன்று; ஒரு மதமும் அன்று இயேசு நம்மில் இருந்து நம் மூலமாக எண்ணுகிறார், நம் மூலமாகச் செயல்படுகிறார். அன்புத் தேவனாக இருக்கும் இயேசு, தம்மை வெளிப்படையாகக் காட்டியருளச் செய்கிறார்.

          பண்டையக் கல்வி கண்ட
               பரன் இயேசு என்னில் அன்பு
          கொண்டதும் அன்றி, என்னுள்
               குடி கொண்டு வாழ்ந்த வண்ணம்
          அண்டினேர்க் கருள இயேசு
               அரும்பணி எல்லாம் ஆற்றி
          எண்டிசை உயிர்க்கும் அன்பை
               என்மூலம் காத்தல் காண்க!

மாபெரியதான் அன்பு நம்மில் இப்போது இருக்கிறது, பண்பாளர் இயேசு நம்மில் வாழ்ந்து வருகிறார்.

ஆற்றல் அனைத்தினும் உங்கள் உள்ளே இயங்கும் அன்பராக இருக்கும் இயேசுவே பெரியவர். ஆகவே 'நாம் கடவுளின் பிள்ளைகளே' என்று நம்பிக்கையுடன் சொல்லலாம். கீழ்மையின் வல்லாண்மையைத் தகர்த்தெறிந்து, இறப்பின் பாலங் களையும் சிதறிப் புழுதியாக்கிவர் பெரியவர். குழப்பங்கள் உள்ள உங்கள் இல்லங்களில் உறைபவர் அந்தப் பெரியவர். மாந்தனின் நெஞ்சத்தை ஆளும் தனிமுதல் பேரரசர் அவர்.

நம்மில் இருந்து அன்பாட்சி செய்யும் அன்புப் பேராண்மையர்.

அன்பு என்பது அமைதி

நாம் எப்படியெல்லாம் அனபுக்காக ஏங்கியிருக்கிறோம், நம்மில் 'அன்பு உள்ளது என்று அறிந்திடாமில்!

நம்முள்ளே இயேசு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அறியாமல் இயேசுவிடிம் கொளள வேண்டிய பற்றார்வம் வேண்டும் என்று எத்தனை நாள்.அவாவியுள்ளோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/107&oldid=1516668" இலிருந்து மீள்விக்கப்பட்டது