பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அன்பு வெள்ளம்


1 யோவான் 4:7.8 'விருப்பத்துக்குரியவர்களே, ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கக் கடவோம். ஏனெனில், அன்பு கடவுளால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் கடவுளால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான்.”

"அன்பில்லாதவன் கடவுளை அறியான்; கடவுள் அன்பாகவே இருக்கிறார்"

அவர் நம்முடைய அன்பர். அவ் அன்பர் உங்களில் இருக்கிறார் உங்களை அன்பு கூர்ந்துள்ளார். இறப்பை வென்று உயிர்த்தெழுந்தபோது நம்மில் அன்பு கூர்ந்திருக்கிறார் இப்பொழுது நம்மை அன்பு கூர்கிறார்.

உங்களுடைய தேவைகளைவிட அன்பு பெரியது, தேவன் மாபெரியர் அவர், அறவேந்தர், இரக்கத்தின் இறை.

இல்லற வாழ்வின் ஆற்றல் கூறினையும், வாணிகத்தின் விளைபயனையும் பெருக்கியும், அல்லது பெருக்கவிடாமல் தடுக்கின்ற தடைகள் அனைத்தினையும் உடைத்தெறிந்தும் மேலோங்கி நிற்கும் ஆற்றலை நல்கும் ஒருவர் நம்மில் இருக்கிறார்.

மாந்தரில் அன்பிலாதவர் இருக்கிறார்கள் இருப்பார்கள். அவர்களையும் அன்புடன் விரும்புங்கள்.

இயேசு நம்மில் அன்பு கூர்ந்தார், ஆகவே நீங்கள் அவரில் அன்பு கூருங்கள். அவர் மரித்தது அன்பிலாதவர்க்காக. அப்படிப் பட்டவர்கள் வாழ்ந்திட, நீங்கள் வாழுங்கள், மாந்தர் அனைவரை யும் விரும்பும் அன்பராகிய இயேசு உங்கள் மூலமாக அன்பிலாரை யும் விரும்புபவர், உங்களில் இருக்கிறார்.

அன்பின் வெல்லும் ஆற்றல்

வாழ்க்கையில் எதற்கு இடம் கொடுத்தாலும் கொடுக்கா விடினும், அன்புக்கு இடம்தர வேண்டும்; அதிலும் அன்பே முதலிடம் பெற வேண்டும்.

இந்தக் கருத்தில் நம்பிக்கையுள்ளவர், அன்பினை நாடுகின்றனர். பற்றார்வம் உள்ளவரின் உயிர் வாழ்க்கையின் மையமே அன்புதான்்.