பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

105


1.பேதுரு 4:8 "எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான தீங்கு களை மூடும்"

இப்படித் தீங்குத் திரளை மூடும் அன்பு, பொதுவான அன்பில்லை, உச்சகட்ட அன்பு: யார் எவர் என்று பாராது நெகிழ்ந்து தன்னையே தரும் அன்பு. அறிவினால் ஆளப்படும் அன்பில்லை; கட்டுபாடற்ற அன்பு, கட்டுக்கடங்காத அன்பு.

அவ் அன்பு திரளான தீமைகளை வாராமல் தடுக்கும், வந்திடினும் திருப்பி அனுப்பும், அழிக்கும். அதே அன்பு, பூசலும் மனக்கசப்பும் அற்றதோர் பண்புலகில் கொண்டு சேர்க்கும் அவ் அன்பு. இயேசுவின் அன்பு போன்ற அளப்பரும் அன்பு, உயர் நிலை அன்பு: உலப்பில்லா அன்பு. உச்சநிலை அன்பு.

மீமிசைமாந்தர் அடையாள முத்திரைகள் அனைத்தும் தன்னகத்தே கொண்டது அன்பு. தோல்விகளையும், பலவீனங்களையும் அவற்றைச் சார்ந்த அனைத்தையும் வென்றிடக் கூடியது அன்பு. பாசமற்ற பேச்சும் கட்டுக்கதைகளும் அன்பிடத்திலிருந்து வாரா. நெஞ்சத்தின் அடித்தளத்திலிருந்து தனியாப் பற்றுடன் வெளிப்படும். போலியற்ற உண்மையான அன்பு. அந்த அன்பு தான், சிறப்பேதுமற்ற இடத்தில் இருக்கும் ஒருவரைச் சீரும் சிறப்பு மிக்க தன்னிடத்தில் கொணர்ந்து சேர்ப்பது.

இத் தகு புதியபாணி அன்பு, காலங்கள் கண்ட அற்புதம். அனைத்துயிர்கள் நலமும் மகிழ்வும் பெற்றிட விழைவதும் பணிகள் புரிவதும் நம்மில் இருந்து செயல்படும் அன்பு.

அன்பெனும் சட்டத்தின் பொருள் விளக்கம்

'பத்துக் கற்பனைகள்' என்பது திருமறையில் உள்ள லேவியாகமத்தின் பொழிப்புரையாகும்.

யோவான் 13:34.35 "நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவ்ர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான் கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

"நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய அடியார்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/109&oldid=1516670" இலிருந்து மீள்விக்கப்பட்டது