பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அன்பு வெள்ளம்


கொண்டு தாங்கள் கொண்டிருந்த காதலைப்பற்றிய கமுக்கங்களைப் எடுத்துச் சொல்வதைக் கேட்க முடியாது. இப்போது அவர்கள் காதல் மனத்தில், கசப்புணர்ச்சி, தன்னலம், பகைமை எல்லாம் நிறைந்து பொங்கி வழிவதும், ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிடுவதும் காண்போர் உள்ளத்தைக் கலக்கும், கவலை தரும்.

இன்றைய நாகரிகமிக்க குடும்பம் வாழும் இல்லங்களுக்குச் சென்று பார்ப்போமானால், அங்கு நிலவும் மகிழ்ச்சியற்ற நிலையும், குழந்தைகள் முன்னிலையிலேயே கணவன் மனைவியிடும் சண்டையும் கண்ணறாவும் காட்சியாகும். அங்கே கணவன் மனைவியிடையேயுள்ள அன்பு எரிச்சலூட்டும் வகையில் அலைக் கழிக்கப்படுவதைக் காணப் பொறுக்காது.

"அன்பு தன்னலம் காண்பதில்லை” இதனை நினைவிற் கொண்டால், தன்னலம் அகற்றப்பட்டுவிடுமே. அன்பு தனது என்று எதையும் பார்க்காது. மற்றவர்களுடையதைத் தனதாக்கிக் கொள்ள விரும்பாது அன்பு.

மணமுறிவு கோரும் முறை மன்றங்களில் புதிதான் அன்பு, 'தனது', 'தான்’ என்பதனைக் காண்பதில்லை; கைக் கொள்வதில்லை.

என்ன வியப்பு! இந்தப் புதிய அன்பின் தெய்விக நிலையை நாம் என்னென்பது?

"சினம் - கொள்வதில்லை; தீங்குகளைப் பொருட்படுத்துவதில்லை” இந்த மறைமொழி நெஞ்சில் - நினைவில் நிலைத்து நிற்குமானால், தலைவிரித்தாடும் பழிப்புக்கு முடிவு ஏற்படும். காதலரைத் தனித்தனியே பிரித்துக் குடும்பங்களைப் பாழ்படுத்தும் தேவையற்ற ஐயப்பாடுகளை அகற்றிவிடும்.

'நேர்மைக் கேடுகளில் மகிழ்ந்து கொண்டாடுவது இல்லை; ஆனால் உண்மை எதுவோ அதில் மகிழ்ச்சி கொண்டாடும் அன்பு'. தீங்கு புரிவதில் இன்புறுவதில்லை! தவறுகள் இழைப்பதில் இன்பம் காண்பதில்லை; அடுத்தவரைப் புண்படுத்துவதில் இன்பம் அடைவதில்லை அன்பு. மெய்ப்பொருள் காண்பதில்தான் அன்புக்கு இன்பம்!

'எதையும் தாங்கும் அன்பு' என்பது மறைமொழி. குற்றம் குறை அனைத்தையும் மூடி மறைக்குமே தவிர வெளிப்படுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/112&oldid=1218309" இலிருந்து மீள்விக்கப்பட்டது