பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

அன்பு வெள்ளம்


தோல்வியுறச் செய்யும். ஆனால் எதையும் தாங்கும் அன்பு, வெற்றியைத் தருமே தவிர தோல்வியைத் தருவதில்லை, கைவிட்டுவதில்லை, எந்த நிலையிலும்.

அன்பில் நம்பிக்கை வைக்கத் தொடங்கும் நேரம் நமது வாழ்வின் வெற்றி தொடங்கும் நேரம்! ஓர் அற்புத ஆற்றலை நம்பி, அதனைக் கைக் கொள்ளும் போது, புலனறிவுக்கும் மேற்பட்ட ஒரு அறிவுப் பெருவெளியில் சேர்க்கிறது அந்த அற்புத ஆற்றல்.

அன்பினில் நம்பிக்கை உறுதி கொள்பவர் வாழ்வில் நம்பிக்கை உறுதி கொள்பவர் ஆவார்.

நம்மைப் பற்பல சிக்கல் எதிர் கொள்ளினும் நம்மை அடிமைப்படுத்தி வைக்கும் இடுக்கண்கள் வந்தாலும் நம்மில் நமக்குத் துணையாக நிற்கும் வல்லமை படைத்த மிகப் பெரிய ஒன்று அன்புதான் என்று நாம் சொல்லலாம்,

உள்ளபடியே, அன்பு, நம்மை கடவுளின் அருள் உலகுக்கு உயர்த்துகிறது.

அன்பினைப் பின் தொடர்ந்து செல்க

ன்பு வேண்டும் என்றால், அன்பின் வழி நடந்திட வேண்டும் என்றால், அவ் அன்பின் பொருட்டு, 'நமது' என்னும் அனைத்தையும் புறக்கணித்துத் தள்ளிவிட வேண்டும் அப்படியானால் நாம் அன்பின் வழியில் நடக்கலாம். அந்த அன்பு வழி, முள்கள் நிறைந்ததாகவும் இருக்கும்; செம்மலர்கள் துவப்பட்டும் இருக்கலாம்; எப்படி இருப்பினும் நாம் அன்பு வழி நடப்போம். அன்பினையே பின்பற்றுவோம்; பின்பற்றிச் செல்வோம்.

நம் பணி, அயல் நாட்டில் இருக்குமானால் அங்கெல்லாம் கூட அன்பினைப் பின்பற்றிச் செல்வோம். அன்பு நம்மை அடையாளம் காட்டி அழைக்குமேயானால், அதனை ஏற்று காடோ, நகரோ ஊரோ, குடிசைகள் நிறைந்த சேரியோ எங்காயினும் செல்வோம் அன்பினைப் பின்பற்றி.

அன்பு பணியாற்றுகிறது

ன்றையப் புது நாகரிகப் பண்பாட்டு வாழ்க்கை முறைக்கு ஈடுகொடுத்திடும் வல்லமை அன்புக்குண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/114&oldid=1516672" இலிருந்து மீள்விக்கப்பட்டது