பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அன்பு வெள்ளம்


போல, நான் தங்களை விரும்பினேயானால், என்னுடையவை என்று நான் கொண்ட அத்துணையும் கைவிட வேண்டி வருமே” என்றேன்.

"எதனை நீ கைவிடவேண்டுமென்று சொல்லினை?" என்று மென் நயமுடன் கேட்கிறார்.

ஆண்டவர் என்னை விரும்புவது போல நான் அவரை விரும்பிட முனைந்தால் நான் எதை எதைக் கைவிட வேண்டுமென்று சொன்னேனோ அவற்றின் பட்டியலைப் போட்டேன்.

பட்டியல் போட்டபின், "இதோ! இப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள என்னுடைய பல்வளம் செறிந்த செல்வத்திற்கு மாறாக - ஈடாக நான் வேறு எவற்றைப் பெற இயலும்?' என்று வினவினேன்.

அதுவரை காணாத செல்வ வளத்தினை எனக்கு ஆண்டவர் சுட்டிக் காட்டினார். அப்படிப்பட்ட செல்வ வளம் எது? இயேசு என்னை விரும்பியதுபோல நான் அவரை விரும்புவதால் எனக்குக் கிடைக்கும் அந்தச் செல்வ வளம், அவரது தோழமை.

அவரிடம் மிகுந்துள்ள தெய்வீக வலிமை, அவரிடமிருந்து பொங்கிப் பெருகும் இரக்கம், மென்னயம், அவரிடம் ஒன்றி யுள்ள எதையும் தாங்கும் பொறையுடைமை என்பவைதாம். ஆகவே புலன்களின் வயப்படும் வேடிக்கைப் பொருளான உலகியல் பொருள் அனைத்தினையும் கைவிட்டுத், தூய ஆவியின் அருளாகிய நிலைத்த பொருளைக் கைக்கொள்ள முனைந்து விட்டேன். -

விரும்பும் முறைமை

நான், பயன்படுத்திடப் பயன்படுத்திட, பழுதாகிப் போய், பயனற்றதாகும் அத்துணைப் பொருள்களையும் உதறித் தள்ளிவிட்டுப், பயன்படுத்தப் பயன்படுத்த மென்மேலும் பல்கிப் பெருகிப் பயன்படதக்க பொருள்களே இனிப் பெறுவேன். ஆம் அதுபோன்ற மகிழ்ச்சியை இதுவரை நான் அடைந்திலேன்!

இன்ப நற்பேற்றினை நான் கண்டு உவந்தேன். ஆனால், நான் அரிதின் முயன்று பெற்ற இன்பமெல்லாம் எந்தப் பொருள்களினால் பெற்று வந்தேனோ, எந்ததெந்த மக்களிட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/12&oldid=1515453" இலிருந்து மீள்விக்கப்பட்டது