பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அன்பு வெள்ளம்


ஆண்டவர் மன்பதை மீது கொண்ட அன்பின் இடத்தை நானும் பெற்றாக வேண்டும். அப்போதுதான் அடடா! அந்த அளப்பரும் மகிழ்ச்சி எடுத்துரைக்கவொண்ணாத மகிழ்ச்சி என்னை வந்து அடைகிறது.

ஆம்! மற்றவர்களுக்காக ஆண்டவர் இயேசு தாம் பெற்ற துன்பங்களினால் குறுக்கைப் (சிலுவை)பாட்டினால் - வந்துற்ற துன்பங்களின் வாயிலாக எத்தகைய மகிழ்ச்சி பெற்றாரோ அதே மகிழ்ச்சியை நானும் பெறுகிறேன். ஏனெனில், அவர் என்னை விரும்பியது போலவே நானும் இயேசு விரும்புவதால்.

          அன்பினால் ஆவது நன்மையா தீமையா
          என்றாய்வோர் அன்பறியாதார்.


வாழ்க்கையில் அன்புபெறும் உரிமை இடம்

பாடல் புனைவதில் - கவிதை யாப்பதில் தேர்ந்த திறம் பெற்று அவற்றின் வாயிலாக ஏதோ சற்று அன்பினைப் பற்றி எடுத்து இயம்பிட முடியுமே அல்லாமல், வெறும் வாய்ச் சொற்களால் அன்பினைப் பற்றிச் சொல்லிவிட முடியாது.

நம்மை நாம் உணர்ந்திட வேண்டுமானால், அன்பிற்குரிய இன்னிசையுலகில் நாம் இரண்டறக் கலத்தல் வேண்டும். பகைமை என்னும் வன்மம் கொண்டிராமல் மறுமையின் உயிர்துடிப்பினை நாம் கேட்டுணர்கிறோம்.

பொறுப்புணர்ச்சி, பேராசை, பகைமை போன்ற இடர்ப்பாடுகளை எல்லாம் கடந்து மேல் நின்று மெய்யின்பம் பெற வைப்பதற்கான ஒருவகை புதிதான் ஆற்றலால் இயங்கவல்ல மேல் உயர்த்தும் ஒன்றினை நாம் காணுகிறோம்.

அன்பே, மனிதன் பிறத்தலுக்கும் உயிர்த்தலுக்கும் வாழ்தலுக்கும் முழுமுதற் காரணமாகும்.

அன்பின் வேட்கை மட்டும் இல்லாது போயிருப்பின் ஊழுழி காலமாகத் தொடர்ந்து மனிதன் படைக்கப்பட்டிருக்க மாட்டான். அன்புதான் மனிதரை உலகில் படைத்து உலவ விட்டிருப்பது.

மனிதர் படைக்கப்பட்டுப் பண்பட்டபோது, உலகமெங்கும் இசையும் நகையும் நிறைந்திருந்தன. எங்கும் இன்மணப்பூக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/14&oldid=1515455" இலிருந்து மீள்விக்கப்பட்டது