பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

11


பூத்துக் குலுங்கியிருந்தன. அவற்றின் நறுமணம் காற்றில் கலந்து கமழ்ந்தது. எல்லாப் படைப்புகளும், மாந்த இனத்தை வரவேற்று திருவிசைப்பா பாடி முழங்கின. மாந்தன் உலகில் வந்து பிறந்தனன்.

அன்பின் வலிமை வென்றது. இறை அன்பின் இடைவிடாத போராட்டம் வெற்றி கண்டது.

மாந்தருக்கு ஏற்படும் எத்தகைய புண்ணையும் ஆற்றிடும் அருமருந்தாகும் அன்பு!

மாந்தரின் தோல்வியினால் ஏற்படும் ஆறாத மனப்புண் ஆறிட, வார்த்த்திடப் பெரும் மருந்துக் களிம்பு, கடவுளின் அன்பு!

அனைத்துப் படைப்புக்கும் தேவையான படைப்பாற்றலே அன்புதான். அன்பு என்பது படைப்பாற்றல். உய்யும் பொருட்டு வந்துய்யும் நம் பிறவிக்கு வாய்த்த பெற்றோர் என்னும் தோற்றுவாயைத் தோற்றுவித்தது அன்பு.

எதிர்வரும் தலைமுறையினைக் காணும்பொருட்டு ஒரு மேன்மைத் திருமணத்தைக் கூட்டுவிப்பதன் மூலம் ஒர் ஆணையும் பெண்ணையும் அருளப் பெற்றிட அப்பனாக அம்மையாகச் செய்வது அன்பு: மகப்பேறு பெற்றிடச் செய்ய, ஒன்றுகலந்த ஆணையும் பெண்ணையும் முறைப்படி காத்திருந்து தாய்மையாக, தந்தமையாகச் செய்வதும் அன்பு!

அன்புதான் குழந்தையை நல்கவும் வளர்க்கவும் வல்லது. அது அன்பற்ற சூழலில் பிறந்திடும் குழந்தையும் உண்டு. ஆனால் அவர்களால் பிறந்த குழந்தைக்கு மாறாக அவர்களாலேயே இழைக்கப்படும் குற்றமாகும். பிறந்திடும் ஒவ்வொரு குழந்தையும் அன்பின் வழியதாகவே இருந்திட வேண்டிய உரிமை பெற்றதாகும்.

குற்றங்களில் எல்லாம் மாபெரும் குற்றமாகக் கொள்ளப்படுவது அன்பினை வதைபட வைப்பதுதான். இயற்கையினால் நமக்கு அளிக்கப் பெற்ற அத்தனையுமே அழகானவை.

அன்பு கொல்லப்பட்டதெனின், நமக்கு அருளப்பெற்ற அக, புற அழகு இறந்துபடும்.

அன்புதான் நம் வாழ்க்கையின் நெஞ்சின் இயக்க ஆற்றலாகும். அவ் அன்பே, நம் இல்லத்தை - இல்லறத்தை ஆக்கும் ஆற்றல் விசையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/15&oldid=1219686" இலிருந்து மீள்விக்கப்பட்டது