பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அன்பு வெள்ளம்


அன்பு குடிக்கொள்ளாத இடத்திற்குச் சென்றால் நாம் வாழ்ந்திட ஒர் இல்லம் அற்றவராவோம்.

வீடு என்று எண்ணி அதன் உள்ளே சென்றால், அங்கே ஆயிரம் அழகுப் பொருள்கள், நாற்காலி உயர்பலகை, நிலைப் பேழைகள் எனப் பலப்பல இருப்பினும் அன்பில்லாதவர் வாழும் வீடாக அது இருக்குமேயானால், அந்த வீட்டினுள் நுழைந்ததும் ஏதோ ஒன்று இல்லாததுபோன்ற ஒர் உணர்வு நமக்குள் ஏற்படுகிறது அல்லவா! அந்த விட்டில் ஏதோ இழவு நேர்ந்திருக்குமோ வேறு ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. ஏன்? அங்கே அன்பினைக் காணோம்; காணமால் போன அவ் அன்பு கல்லறைக்குள் போகவில்லை அவ்வளவுதான்! அவ் வீட்டினுள் அளப்பரும் செல்வம் இருக்கலாம்; இருந்தும் அது ஒரு வீடாகக் கருத முடியாதுதான்.

அன்பு ஒன்றுதான் - அன்பு மட்டுமே நமக்கு இல்லறம் அல்லது நல்லறம் அன்று என வாழும் இல்லத்தை அளித்திருக்கிறது.

ஒருவனுக்கு ஒருவள் என்னும் நெறி மீறி ஒருவருக்கு மேற்பட்டுப் பலரை மணக்கும் வழக்கத்தைக் கொண்ட வாழ்வறப்பற்றற்றவர் வாழும் நாட்டில் இல்லறம் ஏது? இல்லற ஒழுக்கம் வாழும் இல்லம்தான் ஏது? ஏதோ பலர் சேர்ந்து ஒரிடத்தில் வாழ்கின்றனர் .... அவ்வளவே!

பொன்னுலகம், பலமகளிர் மனத்தை அழித்துப் போடும். இல்லறம் வாழும் இல்லம் என்பதனை இயேசுவின் அன்புதான்் படைத்தளிக்கிறது.

அன்பு என்பது ஒருவனையும் ஒருவளையும் தலைவன் தலைவியாக ஒருவர்க்கொருவர் இல்லறத் துணைவர்களாக இணைக்கும் வாழ்க்கைச் சட்டம்.

ஒருவனுக்கு ஒருவள் என்னும் கற்பு ஒழுக்க நெறியில் இணையும் காலம் போன்ற கவின்மிக்கது வேறு ஏதும் இல்லை. படைப்பினங்கள் அனைத்துமே அந்த இன்பப்போதினைக் கொண்டாடுகின்றன.

ஒர் ஆண்பெண் இணை புறாக்களைக் கண்டேன்; எத்துணை மகிழ்வுடன் அவை இரண்டும் இணையும் நேரத்தினைக் கூடிக் குலவி கொண்டாடுகின்றன!