பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

13


ஊர்க்குருவிகளைக் காணுங்கள்; ஒன்று மற்றொன்றை எவ்வளவு அன்புடன் காதலிக்கின்றன!

தேனிக்களைக் காணுகின்றோம்; ஒவ்வொரு மலராகத் தேடித் தேடிப் பறந்து பறந்து தேனினை - மகரந்தத் தாதினைக் கொண் டோடிச் செல்கின்றன.

இவற்றிலிருந்து நான் தெரிந்து கொண்டது: படைக்கப்பெற்ற யாவுமே ஒன்றுக்கு ஒன்று இணை சேர்கின்றன. படைக்கப் பெற்ற அனைத்துமே ஒன்று மற்றொன்றைக் காதலிக்கின்றன.

அன்பு தன்னையே அளிக்கிறது

ன்பினால் மலர்ச்சியுற்ற பூ, பிஞ்சாகி, காயாகி, பழமாக உருமாறிடும் நிலைக்கு விரைவில் வர இருக்கிறது. செம்மலர்கள் மக்கள் மகிழ வேண்டுமென்பதற்காகவே மலர்ந்து மணக்கின்றன. அந்த நறுமணம் காற்றில் கலந்து கமழ்வதை நான் நுகர்ந்தேன். கமழும் செம்மலர்களின் எழிலான இதழ்கள் இளங்கோமள வண்ணம் மாறிப் பழுப்பு நிறமாகிவிட்டன, வதங்கிவிட்டன. இவற்றையெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவ் இதழ்கள் ஒன்றன்பின் ஒன்றாக மண்மேல் உதிர்ந்துவிட்டன. இப்போது செம்மலர்ச் செடி உலர்ந்து நிற்கிறது. ஆம் அந்தச் செம்மலர்ச் செடி இப்போது இறந்தே விட்டது.

ஏன்? அந்தச் செம்மலரில் இயற்கை அளித்திருந்த அன்பின் காரணமாக அழகாக-மணமாக மகரந்தத் தாதுவாக மற்றவர்களுக்காக வெளிப்பட்டதனால் அவ்வாறாயிற்று.

வாழ்க்கைக்கு முதற் காரணமாக அமைந்ததே அன்புதான்். எப்போது அன்பு இடம் பெயர்ந்து செல்கிறதோ அப்போதே வாழ்க்கையும் அதன் காரணத்தை இழந்துவிடுகிறது.

நம் வாழ்க்கை நாகரிக வளர்ச்சி பெற்றிட எவை எவை தேவைப்படுகின்றனவோ அவையனைத்துக்கும் அடிப்படையாக அமைவதே அன்புதான்். அத்தகு அன்பு அழிந்துபடும்போது, நம் வாழ்க்கைக்குப் பயன்படத்தக்க யாவும் மறைந்து போகின்றன.

நம்மில் இருக்கும் அன்பு எப்போது நலிந்து நைந்து போகிறதோ அப்போது நம்மைப் பொறுத்த மட்டில் கதிரவன் ஒளி வீசுதல் இல்லை; முகில்கள் ஒன்று கூடி ஒன்றொடன்று மோதுகின்றன, இருள் சூழ்கிறது, வரப்போகும் பேரிடரை முன்காட்டுகிற