பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

15


நம்முடைய முறையீட்டுக்குச் சரியான விடை பயன் கிடைக்கவில்லை என்றால் நாம் எல்லாம் ஒரே வகையான வினாவைத்தான்் அதாவது, "அன்பு நெறிவிட்டு விலகி நடக்கி றோமா?" என்றுதான் கேட்கிறோம்.

யோவான் 3:13:20 "என் உடன்பிறந்தோரே! உலகம் உங்களைப் பகைத்தால் வியப்படையாதீர்கள்".

நாம் உடன்பிறந்தோரிடத்தில் அன்பு கூருகிறபடியால், சாக்காட்டைவிட்டு நீங்கி, வாழ்விற்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். உடன்பிறந்தோரிடத்தில் அன்பு கூராதவர், இறப்பிலே நிலை கொண்டிருக்கின்றனர்.

தன் உடன்பிறப்பைப் பகைக்கிற எவனும் மானுடக் கொலை காரனாயிருக்கிறான். மானுடக் கொலைஞன் எவனோ அவனுக்குள் பெருவாழ்வு நிலைத்திராது என்று அறிவீர்கள்.

சான்றோர் தம்முடைய வாழ்வை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் உடன் பிறந் தோருக்காக வாழ்வைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

ஒருவன் இவ் உலகச் செல்வம் உடையவனாயிருந்து, தன் உடன்பிறந்தான்ுக்குக் குறை உண்டென்று கண்டு, தன் நெஞ்சத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்கிறது எப்படி?

என் பிள்ளைகளே! உரையினாலும் நாவினாலும் அல்ல செய்கையினர்லும் உண்மையினாலும் அன்பு கூரக் கடவோம்.

இதனாலே, நாம் நம்மை உண்மைக்கு உரியவர்களென்று அறிந்து, நம்முடைய நெஞ்சத்தை அவருக்கு முன்பாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நம்முடைய நெஞ்சமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால் தேவன் நம்முடைய நெஞ்சத்திலும் பெரியவராயிருந்து அனைத்தையும் அறிந்திருக்கிறார்.

இயேசுவின் திருப்பெயர், நமது கடவுளிடம் சென்றடையும் வழி வாய்ப்புத் தருகிறது. ஆனால், நாம் அன்பு நெறியை விட்டு