பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

17


வேண்டுதல் செய்தாலும் நோய்வாய்ப்பட்டதிலிருந்து நாம் மீளப் பெறுவதில்லை என்பது திண்ணம்.

வெறும் சொற்களால் மட்டும் நாம் அன்பு கொண்டவராக அன்பு நெறியில் நடப்பவராக ஆகமுடியாது. உள்ளபடியே நாம் அன்பில் நடந்திட வேண்டும். அன்புள்ளவராக - அன்பினால் வாழ்பவராக வேண்டும். நாம் அன்பு நெறியில் நடப்பவரானால் ஒருவர் மற்றொருவருடைய துன்பங்களையும் நாம் ஏற்க வேண்டும். ஏற்று அடுத்தவர் துன்பச் சுமைகளைக் குறைத்திட வேண்டும். அதுவே உண்மை அன்பு நெறியில் நடப்பவர்க்கு இலக்கணம்.

'அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை’.

கலி-133

இயேசு சொன்னது

லகுக்கு இயேசுபெருமான் வந்தார். ஏன்? முதல் உடன் படிக்கையை அவ் உடன்படிக்கையில் எடுத்துக் கூறப்பட்டுள்ள சமய ஆசிரியநிலை, கழுவாய் தேடுதல், பாதுகாப்பு, தன்மறுப்பு, சட்டம் ஆகியவற்றுடன் நிறைவேற்றிடவே. அதே நேரத்தில், பாதுகாத்து அருளல் என்பதனைவிட முழுநிறைவு மீட்டருளலை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய உடன்படிக்கையை அதுவும், ஒரு புதிய படைப்பு - சமயக் குருநிலையும் தன் இழப்பும் மற்றும் சட்டத்தினையும் கொண்ட உடன்படிக்கையை நிறுவிடவே உலகுக்கு வந்தார் என்பதே உகந்ததும் பொருத்தமானதும் ஆகும்.

யோவான் 13:34-35 “நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவராக அன்பாயிருங்கள் என்கிற புதிதான் கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்"

"நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய தொண்டர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” என்றார்.

இந்தத் திருமறைச் சொற்றொடரில் 'அகாபா' (Agapa) என்றொரு புதிய சொல்லைக் கூறுகிறார் இயேசு, 'அகாபா' என்றால் 'அன்பு' அல்லது 'அருளிரக்கம்' என்று பொருள்