பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அன்பு வெள்ளம்


சொல்லப்படுகிறது. அந்தச் சொல் இயேசு அளித்த புதிய கட்டளையின் தனி ஆணையின் கீழ் வாழ்தலாகிய புதிய படைப்பு எனும் மெய்ப் பொருளியலை அறிமுகப்படுத்துகின்றார். அவர்தம் உலகில் ஆற்றுவதற்கான பாடுபணிகளை ஆற்றியதன் அடிப் படையிலும் மேலோங்கி நிற்கும் புதிய கட்டளையைக் கொடுக்கிறார் இயேசு.

"அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் அறமுறைகளைக் கைக் கொண்டு, அவற்றின்படி செய்ய, நான் அவர்களுக்கு என் நெஞ்சத்தைத் தந்து அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்துக், கல்லான நெஞ்சத்தை அவர்கள் தசையிலிருந்து எடுத்துப் போட்டு, சதையான நெஞ்சத்தை அவர் களுக்கு அருளுவேன்"

இவ்வாறு இயேசு அருளிச் செய்த மொழியிலிருந்து என்ன தெரிகிறது?

"நான் ஒரு நெஞ்சத்தைத் தருவேன்” என்னும் அச் சொற்றொடர், அப்படி இயேசுவால் அருளப் பெறுகின்ற நெஞ்சம் அல்லது நெஞ்சங்கள் அனைத்தும் அன்பினால் ஆளப்பெறுபவை என்பதாகும். அடுத்து, 'என்னுள் ஒங்கும் புதிய ஆவியை உங்களுள் நிரப்புவேன்' என்பதனை விளக்கமாகப் பார்த்தோ மானால், இயல்பான மாந்தர், அதுவரை இருந்துவரும் உள்ளுரை இயல் மெய்ம்மை கொண்டு இலங்கும் மாந்தர், இனி திரும்பவும் இறைவனின் இயல்பான அருள் வாழ்வினைத் தொடர்பு கொண்ட படைப்பாகப் பெற வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இயேசு மறுபடியும் சொல்லுகிறார் : கல்லான நெஞ்சத்தைத் தசையிலிருந்து எடுத்துப் போட்டுச் சதையான நெஞ்சத்தை அருளுவேன்'

இப்படி அருளப் பெற்றவர் புதிய உடன்படிக்கையின்பாற் பட்ட மனிதர்.

புதிய பிறப்பால், புதிய உடன்படிக்கையை எய்துகிறார்கள். பழைய உடன்படிக்கை, யூதர்களை வேலையாள்களாக ஆக்கின.

புதிய உடன்படிக்கையோ மாந்தரைப் பிள்ளைகளாக்குகிறது.

இப்படித் தூய ஆவியானவரின் தருக்கம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதேயாம்.