பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

19


விளங்கச் சொல்ல வேண்டுமானால் ஊனால் ஆகிய உடம்பிலிருந்து சற்றேனும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நம் உடலிலுள்ள ஐம்பொறிப் புலன்களை அவித்து அருளுகிறார் என்பதாம். அப்படியென்றால், நாம் நம் ஊன் உடலின் - உணர்வுகளில் இயக்கங்களிலிருந்து வானுரை வல்லாளனின் ஆவியால் ஆளப்படும் நிலைக்கு உயர்த்தப்படுகிறோம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

மாந்தன் படைக்கப்பட்டபோது அவனைத் தூய ஆவியே ஆட்கொண்டது. ஆனால் தீமை செய்யத் தொடங்கியபின் ஊன் உடம்பு அவனது தூய ஆவியாம் தெய்விகத்தை தன் அடிக்கீழ் கொணர்ந்துவிட்டது. உடம்பில் ஊன் உணர்வை அகற்றி விடுவதாக இயேசு சொல்லுகிறார்.

தூய ஆவியினால் நமக்குப் புலன்கள் கொண்டு விளக்கிடுவதாவது: ஒரு மாந்தன் மீண்டும் புதிதாகப் படைக்கப்படும் போது அம் மாந்தனின் ஊனுடம்பு அதன் ஆளுமையை இழந்து விடுகிறது.

இதை மற்றொரு வகையில் விளக்க வேண்டும் என்றால், ஆதாமின் ஊன் உடம்பு மேம்பட்ட நிலையினை எய்தியிருப்பினும் இறுதியில் ஊனுடம்பின் ஆளுமையே மேல்ோங்கியது, ஆதாமை வீழ்ச்சி பெற வைத்தது. х -

ஆனால் புதிய - படைப்பில் தூய ஆவியானது, கிறித்துவின் மூலமாக ஊனுடம்பையும் அதன் உணர்வுகளையும் வென்று மேலாட்சி செய்கிறது.

முதல் உடன்படிக்கையின்படி மாந்தன் ஏன் இறைவனை விரும்பவில்லை, தன் அயலானை விரும்பவில்லை, அன்பு கூர்ந்திடவில்லை என்றால் மாந்தனின் நெஞ்சம் தன்னலம் மிக்கதாகவும் ஆவியினால் இறப்பினை எய்திட வேண்டியதாலும் தான்.

மாந்தன் தான்் கொண்ட அன்பு 'பீலியோ' (Phileo) ஆகும். பிலியோ என்னும் அன்பு, தன்னலத்தைக் கொண்டதாகும். இயேசுவானவர் அன்பினைக் குறித்துச் சொன்னபோது என்ன எண்ணி எடுத்து உரைத்தார் என்பதனை அறிய முற்படுவோம். என்றால், "நான் உங்களுக்குப் புதிய கட்டளை இடுகிறேன். அதனை ஏற்றுக் கொண்டு அதன்படி உங்களில் ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/23&oldid=1219151" இலிருந்து மீள்விக்கப்பட்டது