பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அன்பு வெள்ளம்


மற்றொருவரை விரும்புங்கள், அன்பு கூருங்கள், நான் உங்களில் அன்பு கூர்ந்து போலே" என்பது புரியும்.

எளிய மாந்தன் ஒருவன் மற்றொருவனை விரும்பவோ அன்பு கூர்ந்திடவோ இயலாது; புதிதாகப் படைக்கப்பட்டிருப்பதால் மட்டுமே இயலும்.

பொதுவாக உலகிலுள்ள மாந்தர் தம்மைக் கண்டு அவர்களிடம் "உங்களில் ஒருவரை ஒருவர் அன்பு கூருங்கள்: விரும்புங்கள் என்றெல்லாம் சொல்வது வீண் முயற்சி, அவர்களால் முடியாது. அவர்களும் கிறித்து இயேசுவில் புதிதாகப் படைக்கப் பட்டவர்களானால் மட்டுமே முடியும்.

யோவான் 12:9-10 "தந்தை என்னில் அன்பாயிருக்கிறது போல், நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன் என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்;

"நான் என் தந்தையின் கற்பனைகளைக் கைக் கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறது போல நீங்களும் என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்”

"அபைட்" (Abide) நிலைத்திரு என்னும் சொல் "மெனோ" (Meno) என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பொருள் கொள்ளப் படுவதாகும். அதாவது கடைப்பிடியுங்கள் (Abide) என்னும் சொல்லிற்கு ஈடாக 'நிலைத்திரு' என்று பொருள்படுவதாயிற்று. அதனால்தான், "தந்தையின் அன்பில் நான் நிலைத்திருப்பது போல நீங்கள் என்னில் அன்பு கூருங்கள், என் அன்பில் நிலைத்திருங்கள், நான் தந்தையின் அன்பில் நிலைத்திருக்கிறேன். அதுபோல நீங்கள் எனது அன்பில் நிலைத்திருங்கள்" என்று இயேசு சொல்லி அருளினார்.

இதனைச் சற்று வேறுவிதமாகப் பொருள் கொண்டால், இயேசு சொன்ன ஒரு புதுவகையான அன்பு, ஒரு புத்துலகைப் புதிய அருட்பேற்றுலகையே படைத்தளித்தது எனலாம்.

ஆம், இயேசு சொல்லி விளங்க வைத்தது அத்தகு தெய்விகப் பேரன்புப் பேருலகில் நாம் சென்றடைதல் வேண்டும்: வாழ்தல் வேண்டும். என்றென்றும் நீங்காத நிலை மக்களாக் அன்பெனும் அருளுலகை விட்டு அகலாத குடிமக்களாக ஆங்கே வாழ்ந்துய்ய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/24&oldid=1219155" இலிருந்து மீள்விக்கப்பட்டது