பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அன்பு வெள்ளம்



அன்பில் இருவகை என்பதில் வேறுபடுகிறார் இயேசு

யேசு கிறித்து உயிர்த்தெழுந்த பின்பு ஓர் அழகான காட்சி இன்னும் நமது நினைவில் பசுமையாக நிழலாடுகிறது.

கவ்வும் கடுங்குளிர் மிக்க காலைப்பொழுது, இரவு முழுவதும் கடலில் நெடுந்தொலை சென்று வலை வீசியும் மீனேதும் வலைக்குள் அகப்படவில்லை - இயேசுவின் சீடர்களான மீனவர்களுக்கு.

கடும்பசியும் கடுங்குளிரும் அவர்களை வீணில் வலைவீசிக் கொண்டிருப்பதை விடுத்துக் கரைக்குத் திரும்ப வைத்தது. கரையருகே வரும்போது கரை மேல் ஒருவர் தீமூட்டி ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

அவர்களை நோக்கி "பிள்ளைகளே புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா?" என்றார்.

அதற்கு அவர்கள், "ஒன்றுமில்லை” என்றார்கள். அப் பொழுது அவர், "நீங்கள் படகுக்கு வலது புறமாக வலையைப் போடுங்கள் உங்களுக்கு அகப்படும்” என்றார்.

அப்படியே அவர்கள் வலையைப் போட்டுத் திரளான மீன்கள் அகப்பட்டதனால், அதை இழுக்க மாட்டாதிருந்தார்கள்.

ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த தொண்டனான யோவான், இயேசுவைப் பார்த்து, "அவர் கடவுள்" என்றான்.

'அவர் கடவுள்' என்று சீமோன் கேட்டவுடனே, தான்் ஆடையில்லாதவனாக இருந்தபடியால், தன் மேற்சட்டையைக் கட்டிக் கொண்டு கடலில் குதித்தான்். கரைக்கு வந்தான்். மற்றவர்களும் படகிலிருந்து கொண்டே மீன்கள் உள்ள வலையை இழுத்துக் கொண்டு கரைக்கு வந்தார்கள்.

அவர்கள் கரையிலே வந்து இறங்கினபோது கரி நெருப்பு போட்டிருப்பதையும் அதன்மேல் மீன் வைத்திருப்பதையும் அப்பத்தையும் கண்டார்கள்.

இதுபோன்ற அரிய காட்சிகளுடன் அக் காட்சிகளைப் படைத்த இயேசுவும் நம் நினைவில் கொண்டு பார்க்கலாம். அந்த ஆவல் நமக்கு உண்டெனினும் அதையே திரும்பத் திரும்பப் பார்ப்பதினால் நாம் அடையப் போகும் பயன் ஏதும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/26&oldid=1515459" இலிருந்து மீள்விக்கப்பட்டது