பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அன்பு வெள்ளம்


அதற்கு பீட்டர் ஆகிய சிமோன் "ஆம்! ஆண்டவரே! உம்மை - அன்புடன் விரும்புகிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றான். இப்போதும் சீமோன் முதலில் சொன்ன சொல்லாகிய "பிலியோ" (Phileo) என்னும் சொல்லினைப் பயன்படுத்தினான்.

மூன்றாம் முறையாக, இயேசு அவனை நோக்கி 'யோனாவின் குமரானாகிய சீமோனோ, நீ என்னை விரும்புகிறாயா? என்றார். இம்முறை மட்டும் இயேசு சீமோன் சொல்லிய பீலியோ என்னும் சொல்லைப் பயன்டுத்தினார்.

இரண்டு முறை 'அகபா' என்னும் புதிய சொல்லைப் பயன் படுத்தினார் இயேசு.

பேதுரு, துக்கப்பட்டான், "ஆண்டவரே! நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை அன்புடன் விரும்புகிறேன் என்பதையும் நீர் அறிவீர்” என்றான்.

இயேசு பயன்படுத்திய இரு சொல்லையும் தொண்டர்கள் அறிந்திருந்தனர். ஆயினும், 'ஏன்? ஆண்டவரே அன்புடன் விரும்புகிறாயா? என்னும் சொல்லுக்கு இருமுறை அன்பு என்னும் சொல்லுக்கு 'அகபா' என்னும் சொல்லினையும் மூன்றாவது முறை மட்டும் அன்பு என்னும் சொல்லுக்கு பிலியோ (Phileo) என்று பீட்டர் பயன்படுத்திய சொல்லையே பயன்படுத்தினர்?' என்று கேட்கவில்லை.

ஆனால் இருவேறு சொற்களுக்கும் (பிலியோ) அன்பு என்னும் சொல்லுக்கும் (அகபா) அறம், அருளிரக்கம் என்னும் சொல்லுக்கும் கிட்டதட்ட ஒரே பொருள் இருப்பினும் இரு சொல்லும் ஒன்றுக்கு மற்றொன்று வேறு பொருள் தருவதாகும் என்பதனைத் தொண்டர்கள் அறியார். ஆனால் இயேசு நமக்கு அவ் இரு சொல்லினையும் வேறுபடுத்திக் காட்டுகிறார்! எப்படி? இயற்கையாக மாந்தருக்கு இருக்கும் அன்பினையும், அவர் உயிர்த்தெழுந்து தொண்டர்களுக்கும் மற்றவர்களுக்கும் காட்சி தந்த பின்பு, இயேசு கொண்ட அன்பினையும் ஒப்பிட்டுப் பார்த்திட முடியும் என்பதனை. 'அன்பு' என்பது இரக்கத்தோடு நின்று விடாமல் மேற்கொண்டு சென்று ஈகை'யாகவும் விளங்குவதுதான்் அன்பின் பொருள் விளங்கும் என்று விளக்காமல், விள்க்கி யிருக்கிறார்.

பங்கமில் செய்கைய ராகிப்பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது - குறள் 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/28&oldid=1219166" இலிருந்து மீள்விக்கப்பட்டது