பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அன்பு வெள்ளம்


இல்லற வாழ்க்கையில் ஒற்றுமையின்றிப் பிளவு ஏற்பட்டுத் தனித் தனியே பிரிந்து சென்று வருவதும் கண்கூடு. என்ன காரண்ம்? கணவனின் தன்னலம். அதனால் மனைவியும் அத் தன்னலத்தையே கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே சூழ் நிலையில்தான் அந்தக் குடும்பத்தில் பிறக்கின்ற குழந்தைகளும் வளர்கின்றன. வளர்ந்த பின் அவர்கள் வாழ்க்கையும் வாழ்வகை வாய்ப்புக் கூறுகள் அற்றும் இடை யூறுகள் நிறைந்ததுமாகவே அமைகிறது.

ஒயாத சண்டையும் உள்ளக் கசப்பும் உடைய வீடுகளில் பிறந்து தவழ்ந்து வளர்ந்துவரும் குழந்தைகளைவிட 'ஏலாதவர் பேணகம்' எனப்படும் சின்னஞ் சிறார் காப்பிடங்களில் வளர்ந்து வரும் குழந்தைகளே நல்லமுறையில் நல்ல சூழ்நிலையில் வளர்ந்து வருகின்றனர் என்பது நாம் அறிந்த உண்மையாகும்.

எழுபத்தைந்து விழுக்காட்டிற்கு மேலாகச் சிறுவர்களும் சிறுமிகளும் இளம் குற்றவாளிகளாக எண்ணப்படுபவர்கள் எல்லாம், சிதைந்துபோன - சீர்குலைந்து போன குடும்பங்களிலே இருந்து வெளியேறியவர்கள்தாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளைத் திருத்தி அறநெறிப்படுத்தும் காப்பகங்களில் உள்ள இளைய தலைமுறை எனப்படும் இளம் வயது ஆண்கள் - பெண்களைப் பெற்றோர் அவர்களை ஈன்றெடுத்த போதும், அவர்கள் பின்னர் வளர்ந்துவரும் போதும், கையோடு கை சேர்த்தும் கோர்த்தும் புதிய அன்புடன் நடந்திருப்பார்களா என்று எண்ண இடமே இல்லை.

'அன்பு' என்பது நம்மை ஒன்று சேர்த்து வைக்கவல்ல தெய்விகப் பிணைப்பாற்றல் ஆகும்.

இல்லறம் ஓங்கும் நம் இல்லத்தை ஓங்கச் செய்வது அன்பு

நாகரிக முதிர்ச்சி பெற்ற - முற்பட்ட காலத்திற்குரிய மொழிகளில் 'இல்லம்' என்னும் சொல் எங்கேனும் கையாளப் பட்டுள்ளதா என்று நீங்கள் அறிந்திருப்பீர்களேயானால் அஃது ஒர் அற்புத்மே.

தூய (Bible) திருமறையில் எபிரேய (Hebrew) மொழியிலிருந்து 'இல்லம்' என்னும் சொல்லினை மொழி பெயர்த்திருக்கிறோம். "Home எனும் சொல் எபிரேய மொழியில் 'வீடு, கூடாரம், வாழும் இடம்' என்று பொருள்படும். அந்த வீடு அல்லது கூடாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/30&oldid=1515461" இலிருந்து மீள்விக்கப்பட்டது