பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

29


யும் அன்பின் வழியாகவே செய்து முடித்திட அருள்கிறது. எவ் வகையிலும் எத்தகைய கண்டம் வந்தாலும், அந்தத் திரும்பு கட்டத்தில் என்னைத் தன்னந்தனியே கைவிடாமல், அங்கே என்னைத் தடுத்து ஆட்கொள்ளும்; என் பணியில் வெற்றி பெற்றிட அருளும் என்று உறுதியாக எண்ணுவது தான் அப் பயிற்சி.

தன் வாழ்வின் தளிர்க் கைகளைக், கொடிமுந்திரி கிளைகளின் மேல் தாவிப் பற்றிடச் செய்கிறதோ அதுபோன்று நாம் நமது நெஞ்சங்களைத் தூய்மையுடன் திறந்து வைத்தால் கடவுள் தன்னுடைய அன்பினை வார்த்திடும் என்பது உறுதி.

அறிவுக்கு வரையறை - ஒர் எல்லை உண்டு! ஆனால் அன்புக்கு இல்லை! அன்பினால் நெஞ்சம் சிலிர்க்கிறது; புளகாங்கித உணர்ச்சி பெருகிடச் செய்கிறது. இந்த அளவில் அன்பினை நாம் உணர்ந்தோம் என்றால், வாழ்க்கை என்பது மேன்மையானதாக உண்மையானதாக இயல் கடந்த புதுமைக் காவியமாக ஆகும்.

எனவே ஒவ்வொரு நாளும், நாம் விழித்தெழும்போதே, விழிப்புணர்வு பெற்றபோதே "இன்று நான் நடக்கவிருப்பது அன்புப் பாதையில், இன்று நான் எதற்கும் அஞ்சப் போவதில்லை; எல்லாம் வல்ல இறையின் ஆற்றல் - பேறு எனக்கு வாய்த்துள்ளது, இன்று அவ் இறையின் இயல்பு என்னில் பொங்கிப் பெருகுகிறது, அவ் இறை காட்டிய கனிந்தருளிய அன்பு வாழ்க்கையை நான் கைக் கொள்கிறேன்" என்று எண்ணவும் பின்பு எண்ணியபடி நடக்கவும் வேண்டும்.

எந்த நல்ல செயலிலும் காணப்படுவன தெய்விகம், அன்பு. நல்ல செயல் இன்றேல் அன்பின் செயல் இல்லை, அன்பு இல்லை! அதனால்தான், அன்பினை இறை, திருக்குமரானான இயேசுவிடம் அளித்தார். தம்மில் நிறைந்த இறை அன்பினால் இயேசு அருட்பணி ஆற்றினார். மன்னுயிர்களிடம் அன்பு கூர்ந்து, அவ் அன்பினால் அனைவரையும் ஆட்கொள்ளும் அற்புதப் பணிகள் ஆற்றினார்.

அப்படிப்பட்ட அன்பினை நம்மில் நிறைந்திட - பொங்கி வழிந்திடச் செய்யும் நாள் எந்நாளோ, அந்நாள் நம் வாழ்க்கையில் ஒரு மேலான நாள் ஆகும். நாமாகத் திருப்பி நம்மில் பாய்ச்சிடத் தக்க வெள்ளமாகப் பெருக்கெடுத்து அன்பு எங்கேனும் ஒடுகிறதா என்ன? இல்லை; ஒருக்காலும் இல்லை; எங்கனும் இல்லை. கடவுள் நம் நெஞ்சத்தில் அன்பினைப் பொழியுமாறு நாம் நடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/33&oldid=1219182" இலிருந்து மீள்விக்கப்பட்டது