பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அன்பு வெள்ளம்


கொள்ளவேண்டும். அப்படி நடந்து, இறையின் திருவருள் அன்பென நம்முள் பெருக்கெடுத்திடுமேயானால் அத்தகு அன்பிற்கு வரையும் இல்லை; எல்லையும் இல்லை; அடிைக்கும் தாழும் இல்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

அன்பின் வெளிப்பாடு - அருள் இரக்கம் 2 தெசலோனி 1:3 "உடன்பிறந்தோரே! நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகக் கடவுளைப் போற்றிப் புகழ்கிறோம். உங்கள் பற்றார்வம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்கள் எல்லோரும் ஒருவரில் ஒருவர் வைத்திருக்கின்ற அன்பு மிகுகின்றபடியினாலும் அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது"

அன்பு உடன் பிறப்புகளே! சற்றே எண்ணிப் பாருங்கள்!

நம்மில் ஒருவர்க்கொருவர் கொள்ளும் அன்பு மாண்பானது. அம் மாண்புறும் அன்பால்தான், திருச்சபையில் நமக்கென்றொரு மேம் பாட்டு நிலையினை - இன்னும் சொல்லப் போனால் வல்லமை யையே ஈட்டுகிறோம் என்பது எண்ணி எண்ணிப் பெருமைப்படத் தக்க ஒன்று.

        கள்ளம் கபடம் கலக்கம் இவைமூன்றும்
        எள்ளளவும் இல்லதே அன்பு.

அன்பு என்ன செய்யும் ?

னக்குத் தெரிந்த ஒருவர், ஒருநாள் காலை, அன்பினைப் பற்றிய ஒலிப்பரப்பு நிகழ்ச்சியினை வானொலியின் பக்கத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். கேட்டுவிட்டு, "வானொலியில் சொல்லப்பட்டது போன்ற அன்புடன் நானும் எனது அலுவலகத்தில் நடந்து கொண்டேன் என்றால் என்ன ஆகும் தெரியுமா?" என்று தன் மனைவியிடம் கேட்டார் அவர்.

"நீங்கள் செவியுற்ற அந்த வகையான அன்பினைத்தான்் பின்பற்றிப் பாருங்களேன்" என்றார் அவரின் மனைவி!

"அன்போடு ஒழுகுவதிலோ பழகுவதிலோ முற்பட்டால் அதற்கான துணிவும் இருக்க வேண்டும். துணிவுக்கே எதிரான - கோழையான நான் அன்பு வழி நடந்தால் பிறகு என் நிலை?” என்று உரைத்தார் கணவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/34&oldid=1515462" இலிருந்து மீள்விக்கப்பட்டது