பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

33


கொள்ளப்படுகிறது. இந்தச் சொல் தூய பவுலுக்கு மிக பிடித்தமான விருப்பமான - அடை மொழிப்பெயர் - புனைபெயர், சிறப்புப் பெயர், பண்புப் பெயர் ஆகும். ஏனெனில் இயேசுவின் அன்புக்கு, பவுல், அடிமையாகிவிட்டார். ஆகவே, 'இயேசுவின் அன்புக்கு அடிமை' என்பதிலே காண்கின்ற - பெறுகின்ற - அடைகின்ற இனிமை - பெருமை அளப்பரிது என்று அறியக் கிடக்கிறது.

ஊழியக்காரர்களையும் ஏன் பிள்ளைகளையும் கூட எப் போதும் நம்பிக்கைக்குரியவராக எண்ணிவிட முடியாது. ஆனால் அன்புக்கு அடிமையாகிவிட்ட ஒருவரை எப்போதும் எந்த அளவுக்கும் நம்பிடலாம் - நம்பிக்கைக்குரியவராகக் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட கருத்தில்-உண்மையில் அறைகூவல் நம்மை - நம் உள்ளத்தைக் கூவி அழைப்பதாகக் கொண்டு நாம், இயேசு கிறித்துவுக்கு - இயேசுவின் அன்புக்கு அடிமையாகிவிடலாம்.

"என் ஆண்டவரே! என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். தாங்கள் வகுத்தளித்துக் காட்டிய புதுவகையான அன்புக்கு என்னை அடிமையாக்கிக் கொள்ளுங்கள்" என்றெல்லாம் நாம் நம் குரலால் வேண்டுவதைவிட, நாமே நம்மை இயேசு கிறித்துவின் அன்புக்கு அடிமையாகிவிடச் செய்யும் அளவிற்கு, இயேசுவின் புதுவகையான அன்பு என்னை ஆட்கொண்டு விட்டது.

“எத்தகைய ஈகம் ஆயினும் மனம் உவந்து செய்யவும், எத்தகு வன்முறை நிலவும் இடமாயினும் அங்கே சென்று பணி யாற்றவும் நான் என்னைப் பக்குவப்படுத்திக் கொண்டேன்; உமது அன்பு என்னைத் துண்டுகிறது; என்னை ஊக்குவிக்கிறது - எதற்காக?

ஒப்பில்லாததாக இருந்த அதன் உயர் பண்பை இழந்த இன்றைய உலகை - மண்டலத்தை மீட்கும் ஒப்பரும் பணியாற்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இயேசுவே உம்மோடு என்னையும் இணைத்துக் கொண்டு பணியாற்றுவதற்காக உம்மை வேண்டு கிறேன்' என்று இயேசுவை நோக்கி உளமார வேண்டுதல் செய்யும் முன்னதாக, இயேசுவின் அன்பு நம்மைக் கவர்ந்து விட்டது. அவர் அன்புக்கு நம்மை அடிமையாக்கிவிட்டது.

அன்புடையார் எல்லாம் உடையார், அருளிரக்கம்
ஒன்றுடையார் கண்ணே உலகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/37&oldid=1219196" இலிருந்து மீள்விக்கப்பட்டது