பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அன்பு வெள்ளம்



அன்புக் கட்டாயம்

"கிறித்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” என்னும் 2 கொரிந்தியர் 5 : 14 உரையில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனை உள்ளடங்கியுள்ளது. அதனையே வேமெளத்து என்பார். "கிறித்துவினுடைய அன்பு நம்மை மேலாதிக்கம் செய்கிறது” என்று மொழி பெயர்த்துள்ளார்.

தூய பவுல் பற்றி ஒருவர் இப்படி குறிப்பிடுகிறார்; "அவரையும் அறியாமல், கிறித்துவின் அன்புக்கு ஆட்பட்டார், தூய பவுல்”

அப்படிக் குறிப்பிட்டது சரியானதுதான் என்பது போன்று "இயேசுவினுடைய அன்பினைப் போன்றே புதிய அன்பு என்னை அறியாமலேயே என்னை ஆட்கொண்டது; ஒர் உணர்ச்சியில் ஆழ்த்தியது; என்னை, அவ் அன்பு என் வாழ்வில் என்னை மேம்பாடு அடையச் செய்திருக்கிறது" இவ்வாறு ஒர் சான்றினைக் காட்டுகிறார்.

இத்தகு மறைமொழியான சொற்றொடர்களை எல்லாம் நாம் படிக்கும்போது, இதுவரை கண்டறியாத புதுவகையான அன்பினைக் கைகொள்ள எண்ணினாலே போதுமானது. முன்பு தூய பவுலை ஆட்கொண்டது போன்று நம்மையும் இயேசுவின் தெய்விக அன்பு ஆட்கொள்ளும்; இறைவனால் விரும்பப்பட்ட அன்பர்களைப்போலே நாமும் இறையன்பு கொண்டு எல்லா உயிர்களையும் விரும்புபவர்கள் ஆவோம்.

மானிடப் பிறவி எடுத்த எவரும் வாழ்வில் அஞ்சிட வேண்டியவை எத்தனையோ உள்ளன. ஆனால் இயேசுவில் வெளிப்பட்ட மன்னுயிர்க்கன்பு செய்யும் - இயேசுவின் அன்பிற்கு ஆட்பட்டவர்கள் எவருக்கும் என்றும் அஞ்சிடத் தேவையில்லை. ஆம் இயேசுவின் அன்பினைக் கைகொள்ளப் பெற்றவர்கள் யார் எவர் எனினும் அவர்கள் அஞ்சத்தக்க உலகில் உள்ள பேய்மைகள் அனைத்தையும் விரட்டியடிக்கப்படும். மேலும் இயேசுவின் அன்பு ஒருவகையில் நம்மை இயேசு போல் இணக்க வணக்க நடையுடையவராக-கணிவுள்ளவராக மாற்றி உயர்த்தும்; மற்றொரு வகையில் வெற்றி பெற்றவர்களாக்கும்.

நாம் கொண்ட அன்பு, நம் மூலமாக எல்லாரிடத்தும் எல்லாவுயிர்களிடத்தும் பரவிடத் தக்கது என்பதை அறிய வேண்டுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/38&oldid=1515463" இலிருந்து மீள்விக்கப்பட்டது