பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

35


நலம். திருமறையிலிருந்து தாம் கற்ற - மேற்சொன்ன மெய்ம்மை, நம் அறிவுக்கு ஒளி சேர்க்கும்.

பிலிப்பி 1:9. "உங்கள் அன்பனாது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமாய்ப் பெருக வேண்டும்....... ”. என்னும் உரையும் ; அதே போன்று

பேதுரு 4:8 "எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்"

மேற்சொல்லப்பட்ட மெய் மொழிகளில் உள்ள 'ஊக்கமான' (Fervent) என்னும் சொல், உண்மையில் சொல்லப்போனால், 'சுடர்விட்டு ஒளிர்கிற அளவுக்கு வெப்பம்" (White-Heated) அல்லது "இரும்பினைப் பற்ற வைத்திடப் பற்றவைக்கும் இரும்பு பழுக்கக் காய்ச்சப்பட்ட நிலை அளவு வெப்பம்" என்று பொருள்படும். அதுபோன்று நமது அன்பும் பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டம் போன்று நெஞ்சத்தில் அன்பு கனிந்து, நெகிழ்ந்து ஒளி வீசும் அளவினை, நிலையினை அடையும்ேயானால் கிறித்துவத் திருச்சபைத் திருக்கூட்டம் தனித்தனி என்பது மாறி ஒட்டு மொத்தமாக ஒன்றோடு ஒன்று கலந்து இணைந்து ஒரே அவையாகும் அன்றோ!

கொல்லர், ஒளியில் உலோகத்தைச் சுடர்விடும் வரை பழுக்கக் காய்ச்சுகிறார். பற்ற வைத்திடவேண்டியவற்றின் இரு முனைகளையும் பொருத்திப் பழுக்கக் காய்ச்சிய உலோகத் துண்டினை வைத்துப் பற்ற வைப்பதைக் காண்கிறோம். அதுபோல, நெஞ்சம் அன்பினில் கனிந்து உருகி, நெகிழ்ந்திடு மேயானால், அவை வெவ்வேறு என்பது மாறி ஒரே திருச்சபை - ஒன்றுப்பட்ட திருச்சபை - அழகான திருச்சபை ஆகுமே. மூன்றாக இலங்கும் மும்மையும் ஒருமையாகி அருள் தந்தையாக நின்று நிலை பெறுவதனை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

தூயவற்றிலெல்லாம் தூயதான் கூடாரத்தை எப்படிப் பட்டவ்ர்களுக்காக எவ்வாறு அமைய வேண்டும் என்பதை, எந்தை கடவுள் அமைத்துத் தந்ததனை நாம் நினைவு கூர்ந்து பார்த்தால் தெரியும். அதுபோல, இயேசு கிறித்து இன்று நமது திருச்சபை ஒன்றுபட்ட திருச்சபையாக வேண்டும் என்று அதற்கான முறையினை வகுத்தளித்திருக்கிறார். என்ன முறை அது? அனைத்துத் திருச்சபைகளை ஒருசேர வைப்பது ஒன்றாக்குவது