பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அன்பு வெள்ளம்


மெலிந்து உதவி செய்வார் அற்றுக் குலைந்த இயேசு கிறித்துவுக்குக் கொடியவர்கள் முள்ளால் ஆன முடியைச் சூட்டினார்கள். ஆனால் உயிர்த்தெழுந்த இயேசு கிறித்துவுக்கு திருப்பெருந்தந்தை 'இறையொளி மாட்சி' எனும் மகுடம் சூட்டி மகிழ்ந்தார். அந்த இறைஒளி மாட்சி எனும் மகுடம் இயேசு கிறித்துவால் மீட்கப்பட்ட எண்ணற்றவர்களின் அன்பினால் செய்யப் பெற்றதாகும்.

எதை வேண்டி நாம் ஏங்கிக் கடவுளிடம் எதிர்பார்க்கிறோமா அதனை எய்திடச் செய்யும், அன்பு.

அன்பு நெறியினில் தொடர்ந்து நடந்தால், வாழ்வில் தோல்வி என்பது இல்லை. வெற்றியே பெறுவோம்.

        அன்பின் நிழலில் அனைத்துலகும் இன்பின்
        அருள் ஒளியில் ஒங்கும் இணைந்து.

உள்ளத்தில் உறையும் கடவுள்

ன்பு வழி ஒன்றே சிறந்த வழி என்று நாம் அறிந்து கொண்டுள்ளோம். அவ் அன்பினை நாம் நம்புகிறோம்.

வன்கண்மை, கட்டாயப்படுத்தல், வற்புறுத்தல் போன்றவற்றால் ஆகாததை அன்பினால் பெற்றிடலாம்; தருக்கத்தால் - வல்லடிப் பேச்சினால் வென்றிட முடியாததை அன்பினால் வென்றிடலாம்; பணத்தால், செல்வாக்கால் பெற முடியாதவற்றை அன்பினால் பெற்றிடலாம்; முறை மன்றமாம் நீதிமன்றம் சென்றிடுவதைச் - சென்று வெற்றி பெறுவதை அன்பினால் வெற்றி கொள்ளலாம். ஆக, அன்பு என்பது, வன்கண்மை, வாதம், பணம், முறைமன்றம் ஆகியவற்றினும் நன்மை பயப்பதும் மேன்மையானதுமாக விளங்குவது என்று நாம் நம்பிடலாம். நம்ப வேண்டும்; நம்புகிறோம்.

நல்லதைத் தேடிக் கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் எது எது கடினம் என்று கருதுகிறார்களோ அவற்றைக் கற்கவும் கடைப்பிடிக்கவும் அன்பெனும் வழியே சிறந்ததாகும். அன்பு நெறியில் நட்க்கப் பயின்று நடந்துவருபவர் வாழ்க்கையில் எப்போதும் தவறி . இடறி வீழ்ந்து தோல்வியைக் காண்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/42&oldid=1515465" இலிருந்து மீள்விக்கப்பட்டது