பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

41


தான் என்ன? அவர்கள் கற்ற அறிவு நிரம்பப் பெற்ற அளவுக்கு அதனைப் பயன்படுத்தும் அறிவு பெறவில்லை என்பதேயாம்!

கடவுள் அன்பாக இருக்கிறார். அவ் அன்பின் வழி நடந்தால், அறிவத்தின் வழி நடக்கலாம்.

அன்பினால் ஆளப்பட்டோம் என்றால் அதனால் யாருக்கும் ஒரு தீங்கும் இல்லை என்று சொல்லலாம். நீதி மொழிகள் 6:2. 'நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டால் இந்த உரை நினை விருக்கும்.

அன்பு நம்மை ஆளுகின்றது என்பதறிந்திருந்தால், அன்பு நம்மை ஆண்டு கொள்கிறது என்பதறிந்திருந்தால், நமக்கிடையே ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்க மாட்டோம்; நம்மை அன்பே முற்றிலும் தன் வயப்படுத்தியிருக்கிறது என்பதை அறிந்திருந்தால் திருமணம் என்னும் உலக நடைமுறைகளைச் செய்திருக்க மாட்டோம்.

நம்மை அன்புக்கு ஒப்படைத்திருப்போமேயானால் அதுவே நம்மை மேலாட்சி செய்யட்டும் என்று விட்டிருப்போமேயானால், நம் தவறுகளால், நம் வாழ்க்கை பதங்கெட்டுப் பாழ்பட்டுப் போகத் தக்க இடத்தினைப் பெற்றிருக்காது.

கடைசியாக நுணுகி ஆராய்ந்து பார்த்தால், அன்புதான் அறிவம்! மற்றவர்களை இன்பமுறச் செய்ய நாம் கண்டுபிடித்த அனைத்தினையும், ஆராய்ந்து, கண்டு, படைத்திட மாந்தராகிய நமக்குக் காரணமாகக் - கருவியாக இருந்ததே அன்புதான்!

பிறர்நிலை எண்ணிப் பார்க்கிறவராகப் பண்பார்ந்த நடையினராக - மெல்ல அமைதி வாய்ந்தவராகக் - கனிவுள்ளவராக நம்மைச் செய்வது அன்பு!

அன்பில் தோய்ந்தவராக நாம் இருந்தால் நம் பேச்சில் மக்களை வெல்லும் ஏதோ இனம் புரியாத ஒன்று இருப்பது உணரலாம். ஆகவே பேச்சில் மட்டும் மெய்யார்வம் காட்டாமல், அன்பில் தோய்ந்த பேச்சில் மட்டுமே நம் மெய்யார்வம் இருத்தல் வேண்டுவோம்.

மக்களுக்கு ஏதாவது நலம் உதவ முடிவது எப்போது? நாம் மக்களை அன்புட்ன் விரும்பத் தலைப்பட்டால்தான் உதவி செய்வது எளிதாயிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/45&oldid=1219609" இலிருந்து மீள்விக்கப்பட்டது