பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அன்பு வெள்ளம்


சமயவாணரா? நல்லது! அப்படியானால் சமயப் பணியில் வெற்றி பெற வேண்டுமா? அந்த வெற்றி வாயிலில் கதவினைத் திறந்துவிடும் திறவுகோலாக இருப்பது அன்பு.

அன்பினராக - ஆர்வலராக நீ இருப்பதால்தான் மக்கள் உன்னை விரும்புகிறார்கள். அம் மக்களில் ஒவ்வொருவரும் உன்றன் அன்பார்ந்த இன்னுரையினைக் கேட்க விரும்புகிறார்கள். ஆகவேதான் மக்கள் அனைவருமே உன்னிடம் ஒடோடி வருகிறார்கள். உன்னிடம் அவர்கள் அனைவரும் பேசிட விழைகிறார்கள். ஏன்? உன்னால் அவர்கள் விருப்பம் பெற வேண்டும் - உன்றன் அன்புக்குரியவராக வேண்டும் என்பதால்!

ஆகவே, "என்றன் அன்பில் ஆழ்க, தழைக" என்னும் தேவனின் உரையினைப் பின்பற்றுதல் நன்று.

அன்பு வேட்கை

உயிருள்ள ஒவ்வொன்றும் அன்பினை அவாவுகிறது. அன்பில் வேணவா கொள்கிறது!

என் வாழ்வியக்கத்தின் மூலம் நான் கண்டது, உலகம் முழுமையுமே 'அன்பு வேட்கை' கொண்டுள்ளது என்பதுதான். ஆனால் உலகில் உள்ளோர் தாங்கள் கொண்டிருந்த 'அன்பு' என்னும் சொல் அளவில் கொண்டிருந்த அப் பழைய கற்பனை அன்பினையும் தன்னலத்தையும் கொண்ட வெற்று மானிட அன்பினைக் கொண்டு ஏதாவது மேம்பாடு காண முடியுமா என்று பார்க்கிறார்கள். இரங்கத்தக்க நிலை! என்னே! அவர்கள் சான் றோர்களில் விளங்கிய அன்பினுக்கு எப்படி தங்கள் அன்பினை இசைவாகச் செய்யப் போகிறார்களோ?

இளைஞர்களும் இளம் பெண்களும் ஒருவர்க்கொருவர் காதல் வேட்கை கொள்கின்றனர். தன்னைக் காதலித்த இளைஞரிடம் பெண்ணும், தன்னைக் காதலித்த பெண்ணிடம் இளைஞரும் சென்று மென்தோள் வீழ்கிறார்கள். காதலெனும் உரிமைப் பெரு வெளியில் அவர்கள் பெற்றோராகிய உங்கள் ஒப்புதலின்றி களவியல் மேற்கொண்டு உங்கள் பார்வை விட்டு விலகிச் சென்று விட்டார்களா? அவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களைத் தூற்றாதீர்கள்; அவர்களைப் பற்றித் திறனாய்வு செய்யாதீர்கள். "அவர்கள் காதல் தொடர்பு - உறவு தீதான்து; கெடுதலாது” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/46&oldid=1515467" இலிருந்து மீள்விக்கப்பட்டது