பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

45


என்று உணர்த்தக்கூடிய மனச்சான்றும் உள்ளவராக ஆக்கும் - மாற்றும் அன்பு. நினைவுப்படுத்திப் பாருங்கள். நமது அடி மனத்தைத் தொடும் சொற்றொடர் எபே. 2:10. "ஏனெனில், நற்செயல்களைச் செய்வதற்கு நாம் கிறித்து இயேசுவுக்குள் படைக்கப்பட்டுத் தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்.....”.

அப்படி என்றால், நாம் கடவுளின் படைப்பு. அதாவது படைப்பு என்பது இறைமை படைத்தளிக்கும் திறன்.

முதலில் படைக்கப் பெற்றதனால் செம்பொருளாகிய கடவுள், மனத்திற்கு இன்பமுறச் செய்தது; அதுவே போதும்; அதனை நாம் அறிவோம்!

அவர் அன்பர்; அன்புடையவர்; அன்பாக இருப்பவர். ஆகையினால்தான்் அன்பினால், நம்மைப் படைத்தருளின்ார். நம்மில் அவர் அன்பினை உள்ளுடம்பாக அமைத்துள்ளார். இயேசுவில் இருந்து வெளிப்பட்ட அன்பு மொழிகள், அன்புச் செயல்கள் அனைத்தினையும் நம்மில் நம் அகவுடம்பாக ஆக்கி அளித்திருக்கிறார்.இதனை ஏற்று உள்ளார்ந்த பற்றுடன் பற்று றுதியுடன் நாம் நடப்போமானால் அதுவே, நம்மின் அகமாக அங்கமாக ஆகிவிடும்.

கடவுள் நம்மைச் சூழ்நிலை அடிமைகளாகவோ, தீம்புடையவர்களாகவோ படைக்கவில்லை. உலகின் விளை பயனுக்கு கெல்லாம் அடிபணிய ஏவல் புரிய நம்மை இயேசு கிறித்துவுக்குள் புதுப் படைப்பாக படைக்கப்படவில்லை. வெற்றி வீரராக இருந்து இயேசுவுடன் சேர்ந்து நம்மை நாம் ஆட்சி புரிதற்கென்றே இயேசுவில் நம்மைப் புதிதாகப் படைத்துள்ளார் - கடவுள்.

நாம், இயேசு விடுத்துச் சென்ற இடத்தில் இருந்து அன்பினில் நடைபோடவும் செயல்படவும்தான்் சரியானபடி திட்டமிட்டுள்ளார் தேவன்.

இயேசுவுடன் நாம் இணைந்தால் - இரண்டறக் கலந்தால் அவர் வாழ்ந்த அன்பு வாழ்க்கையே நம் வாழ்க்கையாகிறது. அதன் அழகுதான்் என்னே! நம்மில் இயேசு இருந்து கொண்டு நம் மொழி, செயல்களின் மூலம் நம் மேல் அன்பைப் பொழிகிறார்.

திருத்துதர் நடபடிகள் 1:8ல் குறிப்பிடப்பட்டுள்ள (Power) வலிமை என்னும் சொல் (Dunamis) என்பதைனை (Ability) திறமை என்று பொருள் கொள்ள வேண்டும்.