பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒரு முன்னோட்டம்

மாந்த வரலாற்றின் மிக இக்கட்டான காலத்தை இன் நாம் கடந்து கொண்டிருக்கிறோம். கடந்த பல நூற்றாண்டுகளாக, அரிதின் முயன்று, மானிடம் வகுத்தளித்த அன்பு, பண்பு, அறன், ஒழுக்கம் எல்லாம் அழிந்துவிடும் நிலையில் இருக்கின்றன.

இருள் சூழந்த, இந்த நெருக்கடியான சுற்றுச் சார்பு நிலையில் ஏற்படவுள்ள அழிவுகளைத் தடுத்துக் காப்பாற்றிச் சீர்படுத்தும் வகையில் ஏதேனும் வழிமுறை உள்ளதா?

ஒன்றுபட்ட நம் குடும்பங்கள் பிரிந்து செல்கின்றன. முற்றிலும் ஒழுக்கத்தின் அடிப்படையில் கட்டுக்கோப்புடன் விளங்கும் குடும்பங்களின் வாழ்வும் சமூக வாழ்வும் இடர்ப்பாடான நிலையில் உள்ளன.

இவை அனைத்திலும் ஏதோ ஒன்று இல்லாத குறைபாடு தென்படுகிறது. மாந்தனின் இயல்பான அன்பு எங்கோ தோற்று ஒடிவிட்டது.

மீண்டும் மீண்டும் நாம், நம்மையே கேட்டுக் கொள்ளும் வினா இதுதான்.

"அவ் அன்பு தோற்றது ஏன்?" தன்னலம்தான் அதற்கான காரணம்!

இன்றைய புதுப்பாணியில் அமைந்த கல்விதான் பேரச்சம் தரக் தக்க இக்கட்டினை வென்றிட முடியாத தன்னலத்தை வளர்த்துவிட்டது.

அந்தத் தன்னலத்தை எதிர்த்துப் போரிட வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையானதாகிவிட்டது.

அந்தப் போர் இன்றைக்கு நடைபெறுவது, இயற்கையாக மாந்தனிடம் இருக்கும் அன்பினுக்கும் தன்னலத்திற்கும் ஆகும் ஆனால் அன்போ, அப் போரிலிருந்து விலகி நிற்கிறது.

மேலும் அதுபோன்ற போராட்டங்கள், திருமண விலக்குக் கோரும் முறை மன்றங்களில்; முதலாளியத்துக்கும் தொழி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/5&oldid=1218857" இலிருந்து மீள்விக்கப்பட்டது