பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அன்பு வெள்ளம்


அனைத்திற்கும் மேற்பட்ட அனைவருக்கும் மேலானவரிடமிருந்து தனித்தொரு வலிமை - திறமை வரப் பெறும் வரையில், செருசலேமில் காத்திருக்குமாறு தம் சீடர்களிடம் இயேசு பணித்தார்.

அவ் வலிமை - திறமை என்பது அன்புதான். அவ் அன்பு தான், உரோமப் பேரரசினை - இயேசுவை குறுக்கையில் அறைந்த சனன்செரீன் (Sanchedrin) சங்கத்தினையும் வென்றது.

அன்பினைக் கடவுளிடமிருந்து வரப் பெற்றோம் என்றால் கடவுளின் திறமும் நம் கை வரப்பெற்றோம் என்று கொள்ள வேண்டும். நாம் கடவுளின் திறமையினால் மிக மேன்மை நிலைக்கு உயர்த்தப் பெற்றுள்ளோம்.

மாந்தருக்குள் ஏதோ ஒன்று வந்தடைந்துள்ளது. என்னது அது? மாந்தனின் அடிமனத்துள் தோல்வியும் தாழ்வு மனப் பான்மையும் தான் அது. ஆனால் அது கல்லி எறியப்பட்டுவிட்டது.

உண்மையில் நாம் நினைப்பதற்கும் வேண்டிக் கொள் வதற்கும் மேலாக, நாம் மிக அதிகமாகச் செயற்படும் அளவுக்கு அன்பு, நமக்கு அருளப் பெற்றுள்ளது. நம்மில் நிறைந்துள்ள அளவுக்கு அன்பின் திறன் நம்மில் செயல்படுகிறது.

அந்தப் பேரன்புக்கு நம் இயலாமையை - வலுவின்மையை ஒப்படைத்துவிடப் போகிறோம். அந்த அன்பின் திறனால் நாம் எடுத்த, காரியம் எதிலும் வெற்றி பெறச் செய்வோம்.

நம்மை எதிர்த்து வரும் அனைத்தையும் எதிர்த்து முறியடிக்கும் மாபெரும் அன்பு நம்மில் இருக்கிறது. அவ் அன்பே நம்மை இன்று வெற்றி வீரர்களாக்கியுள்ளது.

அச்சத்தாலும், ஐயத்தாலும் நம் வாழ்க்கையில் அலுத்துப் போன நிலையிலிருந்து நம்மை அப்புறப்படுத்தி, எல்லாம் வல்ல கடவுளின் கருணை என்னும் மணமிக்க கவின்மிக்க செம்மலர் தூவிய பாதைக்கு நம்மை வழி நடத்திச் சென்றுள்ளது அன்பு.

எல்லாம் வல்ல கடவுளின் அருளால் இயேசு அன்பால், இறுதியில் நாம் அனைத்திலும் வென்றவர்கள் ஆனோம்; ஆம்! இறுதியில் அனைத்திலும் வெற்றி வீரர்களாகிவிட்டோம்.

அன்பு நெறியில் நடத்தல்

ன்பு நெறியில் - நடப்பது என்பதும் கடவுளில் வாழ்வது என்பதும் ஒன்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/50&oldid=1515469" இலிருந்து மீள்விக்கப்பட்டது