பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

47



"என்னைப் பின்பற்றி நடந்தால், என் சொற்கள் உன்னில் இருக்கும் அல்லது அன்பில் நீ வாழ்ந்து வருவாயேயானால் அன்பும் உன்னில் வாழும்? நீ கேட்பது உனக்கு அருளப் பெறும்".

மறைமொழி மேம்பட்டு நிற்கும் எல்லைப் பரப்பில் பற்றார்வம் செயல்படுகிறது. பற்றார்வம் என்பதும் பற்று, நீதி, அன்பு பரவியுள்ள சூழலில் வளரும். உள்ளபடியே அன்பாட்சி நடைபெறுகிறபோது, விஞ்சி நிற்கும் புதிய படைப்பாற்றலாக விளங்குகிறது பற்றுறுதி எனப்படும் அன்பார்வம்.

அன்பு வாழ்க்கையில் இனிப்பானது ஒன்று உண்டு. அதுதான்் தோழமை - கூட்டிணைவு - கூட்டிணக்கம்.

ஐயப்பாட்டிற்கு இடமில்லாமல், கடவுளின் அன்புடன் நாம் ஒன்றானோம் - தன்னலமற்ற பாங்கில் நம்மால் ஆன அனைத்தையும் அளித்திட கடவுள் அன்போடு நாம் ஒன்றானது நம்மையே வேண்டுமாயினும் மற்றவர் நலனுக்காக வழங்கிட!

பிறரிடமிருந்து வாங்கிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர் மேலும்மேலும் வாங்கினால் தான்் முடியும் என்கிற நிலைக்கு வறுமையில் உழன்றுவிட நேர்கிறது.

தம்மிடம் இருப்பதை மற்றவர்க்கு, ஏதும் அற்றவர்க்கு வழங்குவோம் என்பதை விடுத்து, வாங்கிக் கொள்வதையே நற்பணியின் பரிசாகக் கருதி எப்போதும் கனவுலகில் இருந்து வந்த எண்ணற்ற கிறித்துவ ஊழியம் செய்தவர்கள் - ஊழியத்தின் வாழ்க்கையின் அழகினை நறுமணத்தை இழந்திருக்கிறார்கள் என்பது மிகையன்று! மற்றவர் நலனுக்காக - வாழ்க்கைக்காகத் தன்னையே இழக்கவும் கூடிய இயேசுவின் அன்பினைப் போன்ற அன்புப் பேருலகில் வாழ்ந்து வருவோம் என்றால், தூய ஆவி நம்மை உண்மையினையும் மேன்மையினையும் அறிந்து உணர்ந்து கொள்ள வழி நடத்தும் என்பது நம்பிடற்குரியது.

அன்பினில், நாம் நடந்திடத் தொடங்கினால், இயேசுவின் மொழி - மறை மொழி நம்மில் இருந்து நம்மோடு உரையாடத் தொடங்குகிறது. இயேசுவின் வாய்மொழியில் கடவுள் இருக்கிறார். அதனால் இயேசுவின் திருவாய் மொழிகளை நாம் படிக்கப் படிக்க நம் நெஞ்சத்தில் இன்பமும் மகிழ்ச்சியும் நிரம்புகின்றன. அன்பெனும் பேருலகின்கண் ஒத்திசைந்து நிற்கும்வரை 23வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/51&oldid=1219210" இலிருந்து மீள்விக்கப்பட்டது