பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அன்பு வெள்ளம்


பாசுரம் (Pslam)தனைப் புரிந்து கொண்டிருப்பீர்களா என்று கேட்கிறேன்.

மெல்ல அதனைச் சொல்லிப் பாருங்கள் "கடவுள் என் மேய்ப்பராக இருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” எபிரேய மொழியில் "Lord" இறை என்னும் சொல்லுக்கு செகோவா என்று பொருள். 'செகோவா முக்காலத்தை - நேற்று - இன்று - நாளை என்னும் மூன்று காலத்தையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் சொல்!

செகோவா கடந்த காலத்தவர். நிகழ்கால இன்றைய கடவுள்; வருங்கால - நாளைய கடவுளும் அவரே!

"கடவுள் என் மேய்ப்பர்; நான் தாழ்ச்சியடையேன்” என்னும் மறைமொழி அவருடைய மொழியை, அன்பென்னும் அற்புத வயல்களில் காணுகின்றோம். அந்த அற்புத அன்பு வயல்களில் 'தெய்வத் தோழமை என்னும் வளமார்ந்த - பசுமையான மேய்ச்சலுக்கு நம்மை வழி நடத்திச் செல்கிறார் நம் மேய்ப்பர்.

தூய ஆவியினை வெளிப்படுத்திக் காட்டும் மொழியாம் ஆதிமொழி, அன்பினை வெளிப்படுத்திக் காட்டும் தன்மையது. அவர் தம்மைக் காணும் பொருட்டு ஆதிமொழியான மிறை மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நம் தந்தையாக, அன்பராக, ஆற்றுப்படுத்துவராக, வெற்றி கொள்ளும் ஒருவராக நாம் அவரைக் காண்கிறோம்.

அன்பின் வழியில் நடக்கின்றவர்களின் பின்னால் வாழ்க்கையில் அடைய வேண்டிய வளர்ச்சி காண வேண்டிய முன்னேற்றம், பெற வேண்டிய உரிமை, கிறித்துவில் நாம் பெற்றிட வேண்டிய தனிச் சலுகைகள் ஆகிய அத்தனையும் அணிவகுத்து வருதலைக் காணலாம்.

அருளாளர் இயேசு நம்முள்ளே இருக்கிறார் - வாழ்கிறார் என்னும் உண்மையை அறிகிறோம்; அதனால் நமக்குள்ளே மாபெரும் இறையாற்றல் திறன் இருப்பதையும் நினைவு கூருகிறோம். அத் திறனைப் பயன்படுத்தும் வகைமுறை நம்மிடம் தான் உள்ளது.

நமது உதடுகளில் தவழும் இயேசுவின் வாய்மொழி - வாய்மை மொழி அனைத்தையும் விஞ்சும் உரிமத்தைக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/52&oldid=1219211" இலிருந்து மீள்விக்கப்பட்டது