பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அன்பு வெள்ளம்


கொண்டுள்ளோம். இறையோ இரண்டற அல்லது ஒன்று பட்டிருப்பது என்னும் ஓர் ஒப்பற்ற நிலை; நம்மை மற்றவர்களுக்குப் பயன்படவும் உதவிடவும் உள் நின்று ஊக்கம் தருகிறது என்பது உறுதி.

அன்பு பெறுவதும் கொள்வதும் வாழ்க்கையின்
இன்புறும் பேரின்ப மாம்.

இறைமைப் பண்பின் படிநிலையில் நாம்

டவுள் தூய ஆவியாக இருக்கிறார். அந்தத் தூய ஆவியினால்தான் நாம் உள்ளோம் - தூய ஆவியுடன்தான்் இருக்கிறோம். இறைவனின் இயல்பினை - இறைமைத் தன்மையினை நமக்குப் பண்பாளர் கற்றுக் கொடுத்திருக்கிறார். அப்படியானால் இறை இயல்பு என்பது என்ன? இறை இயல்பு அன்புதான்.

அத்தகு அன்பினால் - அன்பினில் வாழ்வதற்கும் அன் பினைப் பற்றி விளக்கிப் பேசிடவும், அன்பாக நடக்கவும் செயல்படவும் நமக்கு எளிதான்துதான்.

ஆனால், சான்றாண்மையில் நாம் எவ்வாறு உயிர்த்திருக் கிறோம் என்பதை மறந்திருப்பதுதான் நமக்கிருக்கும் பெரிய இடையூறு. நாம் எப்படி இருந்தோம் என்பதை நினைக்கிறோம்.

பழைய வாழ்க்கை முறையில் இருந்ததை நினைத்துப் பார்க்கிறோம். நாம் வாழ்க்கையில் கண்ட தோல்விகளைப் பலவீனங்களை - நமது குறைபாடுகளையெல்லாம் நினைத்துப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் தம்மை நமக்குத் தெரிவித் திருக்கிறார். தம்மை நமக்குப் பங்களித்திருக்கிறார். அதனால் நம் தோல்விகள் அனைத்தும் புதிய படைப்பினில் நம்மைக் கொணர்ந்து விட்டதால், நம் வாழ்க்கைத் தோல்விகள் யாவும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன என்பதையும் மறந்து விடுகிறோம்.

அதே சமயம் 'என்னை வலுப்படுத்தினார் எவரோ அவரில் நான் உள்ளிருந்து அனைத்தையும் செய்திட வல்லேன்' என்று உறுதியாக உரைத்ததனை நினைத்துப் பார்க்கிறோம்.

ஆண்டவராகிய இயேசு கிறித்துவால் நிறைவு செய்ய முடியாத குறைபாடுகள், தகர்த்திட இயலாத தளர்வுகள், தீர்க்க