பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அன்பு வெள்ளம்


இயேசுவின் அன்பிற்குப் ஆட்பட்டவர் ஒரு வாணிகம் செய்பவராக இருப்பதால் அவருடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இயேசுவின் அன்பே செயல்பட வைக்கிறது.

இன்னொருவர், ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவராக இருந்தால், அவர் இயேசு எப்படி எதையும் கண்ணுங் கருத்துமாகச் செய்தாரோ அப்படியே செய்ய வேண்டும் என்று கண்டு கொண்டு தொழில் புரிகிறார். அந்த நிறுவனம் தரும் நன்மை மேன்மையைக் கூடக் கருத்திக் கொள்ளாமல் மனமாரப் பணி ஆற்றுவார். மற்றவர் பார்வைக்குப் பணியாற்றுவது போன்ற பாசாங்கு வேலை செய்வது கிடையாது. தான் வாங்கும் ஊதியத்திற்கு ஆற்றிட வேண்டிய கடமையைவிட மேலாகவே பணியாற்றுவார். தனக்குத் தான் பணியாற்றும் நிறுவனமே கடன்பட்டிருக்கும் நிலைமையை உருவாக்கிக் கொள்கிறார்.

உதவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பின்பு, இயேசு கடைப்பிடித்தது போல, வாங்குவதை விட வழங்குவதையே வாடிக்கையாகக் கொள்கிறார். அந்தப் பண்பு 'எதையும் பிறரிடமிருந்து பெறுவது' என்பதைப் 'பிறருக்கு வழங்குவது' எனும் பாங்காக மாற்றிவிடுகிறது. தன்னால் ஆன மட்டும் ஒருவரை அடிமையாக்கிக் கொள்ளும் தன்னலம் என்பதைனை மேற் சொன்ன வழங்கும் பண்பு அழித்துவிடுகிறது.

அன்பு என்பது ஒரு புரட்சிகரமானது. அது பழமைப்பட்ட ஒன்றன்று! கரடுமுரடான மூலப் பொருள் போன்ற மானிடரைப் பத்தரை மாற்றுத் தங்கமாக மாற்றவல்லது அன்பு. ஓர் எளிய மனிதனை ஒப்பற்ற மாமனிதனாக்கிக் காட்டுகிறது.

கல்வி அறிவும் நல்ல வாழ்வியல் பயிற்சியும் அற்ற பலரை நாம் அறிவோம். அவர்கள் வறுமையில் உழல்பவர்கள்; வளம் வேண்டி நிற்பவர்கள். அவர்கள் பேசிடத் தொடங்கினால் அடடா! எத்தனை பேர் அமைதியாகக் கேட்கிறார்கள்! எப்படி? கல்லாத அவர்களுடைய பேச்சில் அப்படி என்னதான்் இருக்கிறது? அன்பு இருக்கிறது. ஆன்றவிந்தடங்கிய சான்றோரின் அன்பினை மேற் கொண்டு வாழ்ந்து வரும் பண்பு இருக்கிறது. வேறென்ன வேண்டும்?

மாந்தன் என்னை விரும்பினால்

தையும் ஆய்ந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லாமல் எல்லார்க்கும் புரிகின்ற விளங்குகின்ற சொற்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/62&oldid=1515474" இலிருந்து மீள்விக்கப்பட்டது