பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அன்பு வெள்ளம்


-கிறேன்" என்றான் பேதுரு சொன்னபடியே, ஆழமான இடத்தை நோக்கிச் சென்று, வலையை விரித்தான். என்ன வியப்பு: வலையில் நிரம்ப மீன்கள் சிக்கின. மீண்டும் மீண்டும் வலையை வீசி இரண்டு படகுகள் நிரம்பும் அளவுக்கு மீன் பிடித்துக் கொணர்ந்தான் கரைக்கு! பேதுருவின் படகில் அமர்ந்ததற்கு ஈடாக பேதுருவுக்கு மீன் கிடைக்கச் செய்தார் இயேசு பெருமான்.

ஆகவே, இயேசு ஆண்டவரை, உன்னோடு அன்பினால் இருக்கச் செய்தால் நீ செலுத்த வேண்டியவற்றை, ஆண்டவர் இயேசுவே செலுத்தி உன் கடனைத் தீர்த்திடுவார். தந்தையும் மைந்தரும் உன்னிடம் இருக்குமாறு செய்து பார். பிறகு தெரியும் உன் கடன்கள் எப்படி ஆற்றப்படுகின்றன; உன் இல்லற வாழ்வு எப்படி தழைக்கிறது என்பதை நீ கட்டாயம் கண்டு உணரலாம்.

யோவான் 14:21 "என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு, அவற்றைக் கைக் கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான். என் இடத்தில் அன்பாயிருக்கிறவன், என் இறைக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்".

ஆம்! இயேசுவானவர், தம்மை அவர்தம் அருள்மொழியினாலே வெளிப்படுத்துகிறார். உன்னை அன்பாக விரும்புகிற வரை அல்லது நண்பரைவிட மிக நெருக்கமாக உள்ளார்ந்த அன்பராக இயேசு விளங்குவதை நீ அறிந்து கொள்வாய். அவர்தம் திருவாய் மலர்ந்த மொழிகள் வாயிலாக, அவரில் நீ அன்பு கூர்ந்தால் அன்பு கொண்டால் அவரை உனக்கு வெளிப்படுத்திக் காட்டுவார்.

"அவரை அன்புடன் நேசிக்காதவர்களுக்கு இயேசு தம்மை வெளிபடுத்த மாட்டார். இயேசுவின் ஆடையைக் களைந்து, அம்மணமாக்கி, அவர் தலையில் முள்முடியைச் சூட்டினவர்களிடம் இயேசுவானவர் வாய்மூடி இருந்தார்; ஏதும் பேசவில்லை."

அவர் தம்மில் அன்பு கொண்டவர்க்கே தம்மை வெளிப்படுத்திக் காட்சியளிக்கிறார்.

யோவான் 15:9:10 "கடவுள் என்னில் அன்பாயிருக்கிறது போல நானும், உங்களில் அன்பாயிருக்கிறேன். என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் கடவுளின் கற்பனைகளைக் கைக் கொண்டு, அவருடைய அன்பினை நிலைத்திருக்கிறதுபோல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/64&oldid=1219258" இலிருந்து மீள்விக்கப்பட்டது