பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

61


நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்".

அன்பினில் வாழ்வது எப்படி என்று இப்போது விளங்குகிறதா? என்பதனைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்!

ஒருவர் மற்றவர்க்கிடையே நிலவும் சச்சரவு, சண்டை, பூசல், கசப்புணர்ச்சி ஆகியவற்றினை முற்றிலுமாக ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து ஒழித்திட வேண்டுமானால், அன்பில் நிலைத் திருத்தலும் வாழ்வதுமேயாம்!

அன்பில் இணைந்து வாழும் கணவனும் மனைவியும் எப்படி வாழ்கிறார்கள் என்றால், விண்ணகத்தின் சூழலில் வாழ்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

மயக்குறு மக்கள் வழிகாட்டுபவர்

ரு சிறு குழந்தை பெரியவர்களை இயேசுவின் அன்பிற்கு உரியவர்கள் ஆக்குகிறது. உள்ளபடியே இயேசுவின் அன்பின் சூழலில் வளர்ந்துவரும் குழந்தைக்குச் சண்டையைப் பற்றியோ, கசப்புணர்ச்சி - வெறுப்புணர்ச்சியோ தெரியாது.

இயேசுவின் அன்புச் சூழலில் தழைத்துவரும் குடும்பம் ஒன்றில் ஒரு சிறு குழந்தை அந்தக் குழந்தையின் தாய்-தந்தை இருவரிடையே சண்டையோ சச்சரவோ ஏற்பட்டதில்லை; எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்தக் குழந்தையின் தந்தை தாயின் இடையே கடுமையான சொற்கள் வெளிப்பட்டது கிடையாது. அப்படிப்பட்ட தாயும் தந்தையும் அந்தக் குழந்தையின் அத்தை வீட்டுச் சென்றார்கள், ஒருவாரம் இருந்துவிட்டு வந்திட! அங்கே அந்தக் குழந்தையை விட்டு விட்டு, தொலைவிலிருந்து நகரம் ஒன்றினுக்குச் சென்றார்கள் தாயும் தந்தையும்.

ஒரு நாள் அந்தக் குழந்தையின் அம்மான், அதன் அத்தையைத் தடித்த சொற்களால் திட்டிவிட்டார். அதனைக் கேட்ட அந்தக் குழந்தை 'ஓ' என்று அழுது விட்டது. உடனே அழுகின்ற குழந்தையைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு, செல்லமாக, 'அமிழ்து என்ன நேர்ந்தது? ஏன் அழுகிறாய்?' என்று கேட்டார் மாமன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/65&oldid=1515475" இலிருந்து மீள்விக்கப்பட்டது