பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அன்பு வெள்ளம்


"மாமா! நீங்கள் அத்தையை அன்புடன் விரும்புகிறீர்கள் என்று எண்ணினேன்” என்று தேம்பித் தேம்பி அழுதது அந்தக் குழந்தை!

"ஆமாம்! செல்வமே உள்ளபடியே அத்தையிடம் அன்புடன் தான் இருக்கிறேன்” என்றார் மாமன்.

"இல்லை! ஒருபோதும் இல்லை! என் அம்மாவை அப்பா அன்புடன் விரும்புவது போல், அப்பாவை அம்மா அன்புடன் விரும்புவது போல் நீங்கள் அத்தையை அன்புடன் விரும்புவதில்லை. அப்படி நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டிருந்தால் சற்றுமுன் கெட்ட சொற்களால் அத்தையைத் திட்டியிருப்பீர்களா?" என்று கேட்டது குழந்தை.

தன் தோள் மீது அமர்ந்திருந்த குழந்தை முகத்தைப் பார்த்தார் குழந்தையின் அம்மான்; மறுகணம் தன் மனைவியின் முகத்தைப் பார்த்து, "உன்னைத்தான்! சற்றுக் கேளேன்! நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய மேலான ஒன்றினைக் கைவிட்டு விட்டோமோ இல்லையா?" என்று கேட்டார்!

இதிலிருந்து நாம் என்ன காண்கிறோம்? எவர் ஒருவர் தன் மனைவியை அன்புடன் நேசிக்கத் தவறுகிறாரோ அவர், அவருடைய வாழ்க்கையைத் தரும் மிக்க அழகிய ஒன்றினைப் பெற்றிடத் தவறுகிறார் இல்லையா!

ஒருநாள் 'நற்செய்தி' ஒலிபரப்பினைக் கேட்டுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், தன் தாயைப் பார்த்து "அம்மா, நம் வீட்டிலும் இயேசுவின் அன்பினைப் போன்ற அன்பினை நாம் பெற்றோம் என்றால், நாம் மகிழ்ச்சியோடு இருக்கலாம் இல்லையா?” என்று கேட்டான்.

அந்தத் தாய், குழந்தை கேட்டதை நினைவிற் கொண்டாள்; இரவு தம் கணவர் வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன், சொல்லி விளக்கினாள். அது கேட்ட கணவர், ஞாயிற்றுக் கிழமை காலை இயேசுவின் அன்பினைப் போன்ற அன்பினை பற்றிய சொற் பொழிவினைக் கேட்டேன். அதனையே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நாமும் இயேசுவின் அன்பினைப் பின்பற்றி அவ் அன்பினில் நாம் இருவரும் வாழ்ந்து வந்தால் என்ன? என்று மறுமொழி உரைத்தார்! நீங்கள் அப்படிச் சொன்னால், அதன்படி நடந்திட வாழ்ந்திடவே நான் விரும்புகிறேன் என்றாள். இது கேட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/66&oldid=1219372" இலிருந்து மீள்விக்கப்பட்டது