பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

63


மகிழ்ந்தார் கணவர். உடனே, கணவனும் மனைவியும் சேர்ந்து, "நாம் இருவரும் சேர்ந்து அன்பில் இணைந்து வாழ்ந்திட இயேசுவை நம் நெஞ்சக் கதவினைத் திறந்து வைத்து அழைப்போம். அவர் அன்பினில் தழைப்போம். அந்த அன்பினில் வாழ்ந்து வருவோம்” என்று ஒருசேரச் சூளுரைத்தார்கள்.

அது கேட்ட அந்தச் சிறுவன், அம்மானின் இரு கைகளையும் சேர்த்து தன் மார்போடு அணைத்தபடி "இனி மேல் நாம் எல்லாம் இயேசுவின் அன்பில் அவர்கொண்ட அன்புக்குச் சமமான அன்பில் வாழ்ந்து மகிழ்வோம் அல்லவா மாமா?" என்று கேட்டான்.

"அப்படித்தான்” என்றார் மாமா.

நானிலத்தில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் இயேசுவின் அன்பினை ஒத்த அன்பினைப் பெறுதல் வேண்டும்; பெற்று அன்பு வழி வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கற்பிக்க வேண்டும். அந்தப் போதனையில் அவர்கள் அனைவரும் அன்பினைத் தம்மில் கொண்டு விளங்குபவராக வேண்டும். இல்லை என்றால், ஒருவர் மற்றொருவரிடையே சண்டையும் சச்சரவும் பிணக்கும் காழ்ப் புணர்ச்சியும் கொண்டவராகத் தான் இருப்பார்கள். எனவே, எல்லோரும் இடைவிடாமல் நாள்தோறும் இயேசுவைப் பின்பற்றி அவர் வெளிபடுத்திய அன்பினைத் தம்மில் கொண்டு வாழ்ந்திடல் வேண்டும்.

அன்பு நம்மில் முழுமை பெற்றுள்ளது

டவுளின் இயற்கை இயல்பு நம்மில் உள்ளது. மரித்தோரி லிருந்து இயேசுவானவரை, எழுப்பிய வல்லமை மிக்க மாபெரிய தூய ஆவி நம்மில் இருக்கிறது. அவருடன் நாம் ஒன்றுபட்டு விட்டோம் வாழ்வில். எப்படி? அன்பினால். வாழ்க்கையே அன்பு மயம்தான்!

ஒருவருடைய வாழ்க்கையில் அன்பு எப்படி நிறைவு பெற்றுள்ளது, முழுமையாகவுள்ளது என்பதை ஒருவாறு அறிந்து கொள்ளலாம். ஒருவரில் அறிவு நிறைவு பெற்று இருக்காது; ஆனால், ஒருவரில் அன்பு முழுமை பெறும், நிறைவு பெறும்.

அன்பு நம்மில் நிறையப் பெறும்போது, முழுமை பெறுகிறபோது நம் வாழ்க்கையில் அச்சத்திற்கு இடமேயில்லை! அச்சம்