பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அன்பு வெள்ளம்


யார் ஒருவர் அன்பினைக் கடைப்பிடிக்கிறாரோ, அன்பினில் வாழ்கிறாரோ அவர் கடவுளில் வாழ்கிறார்; கடவுளின் அருள் உலகில் வாழ்கிறார்! தன்னை மறந்து தன்னை வெறுமையாக்கித் தன்னில் இறைவனையே உள்ளிருந்து வாழச் செய்பவர். தன்னில் இறைமையை வெளிப்படுத்திக் காட்டுபவர் ஆவார்.

அன்பினால் நாம் பிறந்தோம்; அந்த அன்பு நம்மில் வந்து நிறைந்துள்ளது. ஆகவே நம்மை எதிர் நோக்கி வரும் எத்துணை பெரிய எதிர்ப்பினையும், எத்துணைப் பெரிய பகையினையும் புறமிடச் செய்யும் ஆற்றல் வாய்ந்த மாபெரும் ஆற்றலாகும் அன்பு.

ஆகவே அன்பெனும் பேருலகில் வாழ்க்கையை நடத்திவரும் எவரும் இடைவிடாது கடவுளுடைய தோழமையைக் கொண்டு விளங்குபவர் ஆகிறார்.

திரளான தீவினைகள் வாராமல் நம்மை அரண் எனக் காக்கிறது அன்பு.

1 பேதுரு 4:8 "எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாக இருங்கள். அன்பு, திரளான தீவினைகளை மூடும்”.

ஆம்! திரளான தீவினைகள் நம்மை வந்து சூழ்ந்திடாமல், நம்மை அரண் எனக் காக்கிறது அன்பு. மேலும் நம்மிடம் எந்த தீமையும் வாராமலும் வருவதையும் தடுத்து நிறுத்துகிறது அன்பு.

நாம் எத்தனையோ பேரைக் குறை கூறியிருக்கிறோம்; வெறுத்திருக்கிறோம். அதன் தொடர்பாக அவர்களுடன் சச்சரவு செய்து சண்டையும் போட்டிருக்கிறோம். அதனை இப்போது கேட்டால் கூட நம் நெஞ்சத்திலிருந்து 'உண்மைதான் அது' என்றே விடை வரும். அப்படிப்பட்ட நம் செயல்களிலிருந்து அன்புடைய வரை அரண் எனக் காத்து வருவது அன்பு. ஒருவர் தாம் செய்த தீச்செயலினால் வந்துற்ற தண்டனையைக் கொள்பவராகிய இயேசு விடம் திருப்பி அனுப்பிவிட்டேன். அவர் அதனைச் சுமந்து கொண்டார்.

என் தீங்கிற்குரிய தண்டனையை என்னிடமே திருப்பி அனுப்பி விட்டு, அவர் சுமந்த குறுக்கையினைச் சுமக்காமல் இருந்திருக்க முடியுமா? ஒருகாலும் முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/72&oldid=1219415" இலிருந்து மீள்விக்கப்பட்டது