பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்பு வெள்ளம்

ன்புதான் உலகிலேயே மிக உயர்ந்தது; பேராற்றலான ஒன்று

"அன்பினால் விளைந்தது துன்பம்" என்று சொல்வதற்கான சான்று இன்று வரை காணக் கிடைத்திலது. உள்ளத்தில் அரும்பிப் பூத்து மணக்கும் மென்மையான "நட்பு" என்னும் பூவினை, நசுக்கியும், கசக்கியும் எறிந்துவிட்டது என்னும் வன்மையை இன்றளவும் அன்பு பெற்றதில்லை.

அன்பு, மறை வடிவமான, கடவுளின் திருவுருவக் காட்சி, கடவுள் அன்பாக இருக்கிறார்.

அத்தகு அன்பு வாழ்விலும், அன்பே வாழ்வாகவும் கொண்டால், கண்ணன், புத்தர், அருகன், இயேசு ஆகியோரில் கடவுள் வாழ்ந்தது போன்று நம்மிலும் கடவுள் வாழ்ந்து வருவார்.

இயேசு பெருமான் சற்றே கரடுமுரடானவர் என்று சொல்லப்பட்ட போதிலும், பரிவும், இரக்கமும் மிக்கவராகத்தான் அவர் விளங்கினார். ஆகவே தான்் குழந்தைகள் சின்னஞ் சிறார்கள் அவரை அன்புடன் அணுகினர். அவர் தோள் மீதில் தாவி ஏறி அமர்ந்தும் அவரது தெய்வத் திருமுகத்தைத் தடவியும் பார்த்திட முடிந்தது. அந்தக் குழந்தைகள், இயேசுவிடம் அளவிலாப் பற்று கொண்டனர், கொஞ்சினர்; அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அவர் அருகிலேயே நின்றிட அவாவினர்.

கலிலேயாவின் திருமகனான இயேசுவில் இருந்த அன்புதான் அன்பு! அவ் அன்புதான்், திருச்சபையினை ஆட்சி புரிந்திட வேண்டும். இல்லத்தை ஆட்சி செய்திட வேண்டும். நம் நெஞ்சத்தையும் அவ் அன்பே ஆண்டு கொள்ளல் வேண்டும்.

"அன்பு" என்பது குன்றையும் குன்றுசார்ந்த இடத்தினையும் எப்படி மலர்கள் அழகு செய்கின்றனவோ அப்படித்தான் மாந்தரின் நெஞ்சத்தினையும் அழகு செய்கிறது.

வறள்நிலத்தினையும் காணப் பொறுக்காத மண் பரப்பினையும் முடி மறைத்துக் கவினுறச் செய்வன மலர்கள்தாம்.

பாறைகள் நிறைந்த மலைப் பகுதியினைச் சுற்றி மலர்ச் செடி, கொடிகள் வளர்கின்றன; மண்ணிலும் மண்ணடி வேர்களிலும் அவை வளர்கின்றன; தழைக்கின்றன. பள்ளமும், மேடும் நிறைந்த நிலத்தின் மேற்பரப்பினை அவை தம்மில் பூத்துக் குலுங்கும்