பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அன்பு வெள்ளம்


உயிர்த்து எழுந்து வந்ததுபோன்று மீண்டும் அன்பு கொண்டு, கொடிய மனப்பான்மையில் புதைந்து போய்விட்ட தம் கணவர் எழுந்து மீண்டும் வர மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது மனைவியில் தோய்ந்து கிடக்கும் அன்பு. அந்தக் கணவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று. பொல்லாத போக்கில் புதைந்துவிட்ட அவர் புலரும் பொழுது போல ஒளிமயமான அன்புலகம் நோக்கி ஒரே ஓர் அடியெடுத்து வைத்து நடக்கத் தொடங்கிட வேண்டியது தான்.

நாம் அல்லது எல்லாவுயிருமே வாழ்ந்து கொண்டிருப்பது அன்பினால்தான். அன்பின் அடிப்படையில்தான்! நம் வாழ்க்கையைச் சிறந்ததாக - உயர்ந்ததாக வளநலமாகச் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று; அதுதான் அன்பு!

அப்படிப்பட்ட அன்பு இரக்கமின்றி, கொல்லப்படுகிறதே! தயவின்றி பசித்துத் தவிக்க விடப்படுகின்றதே! சிந்திக்காமல் புறக்கணிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் வருகிறதே அன்பு!

நாம் பேசும் பேச்செல்லாம் இரக்கம் உள்ளதாக, செய்யும் செயல்களில் எல்லாம் இரக்கம் வெளிபடுவதாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஏன்? இரக்கத்தில், தயவில், கனிவில்தான்் அன்பு வளர்கிறது. இத்தனையும் தெரிந்திருந்தும் நாம் நமது வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்திக்கும் போதெல்லாம் அன்பினைப் பற்றியும் அதனை வளர்க்கும் இரக்கத்தையும் ஈதலையும் மறந்தே போகிறோம்.

அன்பினை நினையாமல் மறந்து போகின்ற "மறதி"யையும் அந்த மறதியினால் ஏற்பட்ட அன்புச் சிந்தனையற்ற தன்மையினையும் நாம் எப்படிச் சீர் செய்யப் போகின்றோம்? தெரிய வில்லை!

இயேசுவின் நெஞ்சத்தில் நம் அன்பு வேரூன்றச் செய்திட வேண்டும்; வேரூன்ற நிலைபெறச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், தந்தையின் நெஞ்சத்தில் ஓங்கும் ஆற்றலைப் பெறலாம். அவ் ஆற்றலைப் பெற்றால் நாம் அன்பினை, எப்போதும் எதற்காகவும் மறவாத நிலை பெறுவோம்!

அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்து கொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய முழுத்தன்மையாலும் நிறைபடவும்: என்றெல்லாம் சொல்லி, 'அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கி, நட்புவழி காட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்