பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அன்பு வெள்ளம்


கையாக வெற்றுக் கையாக ஆக்காது. சுருங்கவும் விளங்கவும் சொன்னால், கொடுக்கக் கொடுக்கக் கூடுமே தவிர குறையாது. அள்ளித் தர தரப் பெருகுமே தவிர குறையாது. மனித நலநாட்ட அடிப்படையில் வழங்கினாலும் கூட வழங்க வழங்க, வழங்கப் பட்ட பொருள் குறைந்து, வறுமையில் தள்ளிவிடும் இன்மையாகி விடும் அரசு கொடுக்கிறதே, அதன் கருவூலம் குறைவதில்லையே என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, குறையாது நிறையும். ஆனால் அரசாங்கம் அளிக்கும் எல்லாமே நமக்கு நல்லது விளைப்பதில்லை. ஒரு சாபக்கேடு என்றே சொல்ல வேண்டும்.

உலகையொட்டி வாழும் மாந்தர் எவரும், கொடுத்து உதவுவாரை உயர்ந்த நிலையில் வைத்து எண்ணிட மனம் இல்லா தவர்கள். ஆகவே, ஏதோ ஒருவருக்கு நன்றினைக் கொடுத்தோம் என்பதைவிட, கொடுக்காமல் இருப்பது மேலானது. கொடுப்பது வழங்குவது அளிப்பது - தருவது உதவி புரிவது ஆகிய சொற்கள் ஒன்றின் மாற்றுச் சொற்கள் ஆகும். எனவே நாம் வழங்குவதையும் ஓர் அழகான கலையாக நுண்கலையாக ஏன் உயர்த்தக் கூடாது?

அன்பின் சிந்தை நமக்கு இருக்குமேயானால், அந்த அன்பு நம்மை உதவி புரிவதனை ஓர் அழகுக் கலையாகவே மாற்றிடும். நம்முடைய சொல்லிலும் செயலிலும் அன்பு நோக்கம் வருகின்ற வரையில், நம் சொல்லிலும் செயலிலும் அன்பு ஒன்றே சிந்தையாக இருக்க வேண்டும்.

என்ன சொன்னாலும் நம் மனம் நம் போக்கிற்கு விடுவதில்லை; நீங்கள் ஏதாவது உதவி புரிகிறீர்கள் எனும் போது அதைப் பார்க்கின்ற கண்கள் பொறுத்துக் கொள்வதில்லை! அடுத்த வரைப் புண்படுத்துகிற கடுமையான பேச்சினைப் பேசி அவர்கள் கண்ணீர் விடும் அளவுக்கு வந்த பிறகு அன்பான வார்த்தைகளைப் பேசுவதில் ஏதேனும் பயன் உண்டா எனில் இல்லை! இருக்காது!

நான் பார்த்திருக்கிறேன், சில குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே சிறிய பொருள், ஒன்றினைத் தருவதானாலும் அல்லது ஒரு கைப் பிடி அரிசியை ஒரு பிச்சைக்காரருக்குப் போடும் போது கூட, முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டுதான் இடுவார்கள். இன்னும் சொல்லப் போனால் ஒரு துண்டு எலும்பை எடுத்துச் சேறும் சகதியுமாக இருக்கிற இடத்தில் தூக்கி எறிந்து விட்டு, தெருவில் அலையும் சொறி பிடித்த நாய் ஒன்றினை அழைத்து, ஏதோ அறுசுவை உணவையே படைத்து விட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/88&oldid=1219531" இலிருந்து மீள்விக்கப்பட்டது